செய்திகள் :

Surya Kant: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்ய காந்த்; மோடி, அமித் ஷா பங்கேற்பு

post image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு விழா
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு விழா

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீதிபதி சூர்ய காந்த்:

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய 370-வது பிரிவு ரத்து வழக்கு, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் வழக்கு, பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு போன்ற இந்தியாவின் மிக முக்கியமான வழக்குகளில் நீதிபதி காந்த் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் வழக்கை விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்த நீதிபதிகள் அமர்விலும் இவர் இருந்தார்.

சூர்ய காந்த் (Surya Kant), Upcoming Chief Justice
சூர்ய காந்த் (Surya Kant)

கடந்து வந்தப் பாதை:

நீதிபதி காந்த் பிப்ரவரி 10, 1962 அன்று ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். 2011-ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தில் 'முதல் வகுப்பு' இடத்தைப் பிடித்தார். அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பிப்ரவரி 9, 2027 வரை, அதாவது அவரின் 65 வயது வரை சுமார் 15 மாதங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர்வார்.

திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும்.ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனு... மேலும் பார்க்க

53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்

கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன்... மேலும் பார்க்க

``சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் BJP, RSS வழக்கறிஞர்களுக்கு கொலீஜியம் பரிந்துரை" - திருமா

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்களை கொலீஜியம் பரிந்துரைப்பதாகவும், இதில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் எம்.ப... மேலும் பார்க்க

ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களில் ஒன்று, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு விதிக்கப்பட்... மேலும் பார்க்க

`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2017 ஆம் ஆண்டில் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக நான் உட்பட 5 பேர் மீது மதுக்கூர் போல... மேலும் பார்க்க

``என் தீர்ப்புகளில் மிக முக்கியமானது" - புல்டோசர் வழக்கு குறித்து பகிர்ந்த பி.ஆர்.கவாய்

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். அதனால் நேற்று கடைசி வேலை நாளின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) பிரிவு உபசார விழா நடைப... மேலும் பார்க்க