”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” - அதிமுக பிரமுகர் உட்பட 12 ப...
Switzerland: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தீ விபத்து; 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகமெங்கும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி வரவேற்று வருகின்றனர். அப்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
இந்த தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் மோன்டோனா நகரத்திலுள்ள ஒரு பாரில் டூரிஸ்ட் பலரும் நேற்று இரவு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர். அப்படியான நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளியூரிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் எனவும் போலீசார் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
இச்சம்பவம் நேற்று இரவு 1.30 மணிக்கு நடைபெற்றிருக்கிறது. இச்சம்பவம் தீவிரவாத தாக்குதலால் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இது எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்து என்றே காவலர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
கொண்டாட்டத்தின்போது பயன்படுத்திய வாணவெடிகள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடம் முழுவதுமாக மூடிபட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, கிரான்ஸ் மோன்டோனா நகரம் முழுவதும் விமானங்கள் எதுவும் பறக்கக் கூடாத 'நோ - ஃப்ளை' அமல்படுத்தப்பட்டு உள்ளது.




















