செய்திகள் :

Teejay: "அதை அவர் பொதுவெளியில் கொண்டு வந்ததை தவறான நகர்வாக பார்க்கிறேன்!" - டீஜே பேட்டி

post image

நடிகர் மற்றும் சுயாதீன இசைக்கலைஞர் டீஜே இசையில் 'தேன் குடிக்க 404' பாடல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் பின்னணிப் பாடகி பிரகதி, டீஜேவுடன் தான் சேர்ந்து பாடிய பாடல்களுக்குப் ராயல்டி தொகை கொடுக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து டீஜே, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனது விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார். 'தேன் குடிக்க 404' பாடலுக்காக டீஜேவைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் கேட்டோம்.

Teejay Arunasalam
Teejay Arunasalam

நம்மிடையே பேசுகையில், "எங்களது கூட்டணி 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. 2016-ல் நாங்கள் வெளியிட்ட மியூசிக் வீடியோ மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதுவரை எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை.

நாங்கள் நட்பாகத்தான் இருந்தோம். 2018-ஆம் ஆண்டு 'நகிலா நகிலா' பாடல் வெளியான பிறகே, முதன்முறையாகப் பேமெண்ட் குறித்துக் கேட்டார். அப்போது படப்பிடிப்பில் இருந்ததால், 'போனில் பேசிக்கொள்ளலாம்' எனக் கூறினேன்.

அதன்பிறகு 2025 மே மாதம் வரை அவர் இது குறித்துப் பேசவே இல்லை. ஆனால், 2025-ல் திடீரென 'நகிலா நகிலா' பாடலோடு சேர்த்து 'தேன் குடிக்க' பாடலுக்கும் பேமெண்ட்டும், ஸ்ப்ளிட் ராயல்டியும் வேண்டும் எனக் கேட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இது குறித்து எங்களது வழக்கறிஞர் மூலமாகச் சட்டப்பூர்வ விளக்கம் அளித்தோம். 2022-ல் எனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பிறகே முறையான ஒப்பந்தப் பேப்பர்வொர்க் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியவந்தது.

ராயல்டி உரிமை என்பது பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருக்கு மட்டுமே உரியது. ஒரு சிங்கருக்கு அத்தகைய உரிமை உள்ளதா என IPRS மூலமாகக் கேட்டறிந்தேன். அவர்களும் அப்படி ஒரு உரிமை இல்லை என்றே தெளிவுபடுத்தினர்.

Teejay Arunasalam
Teejay Arunasalam

இந்த உண்மைகளை விளக்கியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது புதிய பாடல் வெளியாகும் நேரத்தில் இந்த விவகாரத்தைப் பொதுவெளியில் கொண்டு வந்ததை தவறான நகர்வாக பார்க்கிறேன்.

சட்டம் சார்ந்த இந்த விஷயத்தை அவர்கள் சட்டப்பூர்வமாகவோ அல்லது தொழில்முறையிலோ அணுகியிருக்கலாம். இந்தச் செயல் என்னைப் பெரிதும் பாதித்துள்ளது. என் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்" என்றார்.

முழு காணொளியை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

மானிய பணம் மக திருமணக்கு போதும்னு இருந்தேன், மறுத்துட்டாங்க‌!- பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ துரை மனைவி

குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மானியம் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடை பெற்ற‌து.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைம... மேலும் பார்க்க

" 'பிச்சைக்காரன் 3' அடுத்தாண்டு அயூத பூஜைக்கு வரும்!" - விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'அப்பாகுட்டி' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் மு. மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா ச... மேலும் பார்க்க

Atlee: "நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!" - மனைவி பிரியா அட்லீ குறித்து அட்லீ

இயக்குநர் அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி தங்களின் 12-ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். Atlee and Priya Atleeஇவர்களின் திருமண வாழ்க்கை மற்றும் 18 ஆண்டு கால நட்பு குறித்து அட்லீ தனது சமூக வல... மேலும் பார்க்க

SCENE: 'சூர்யாவின் நடிப்பு ஸ்டன்னிங்; நஸ்லென் இந்த துறையை ஆளப்போகிறார்'- அட்லீ பாராட்டு

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் 'சீன்' (Scene) படம் வெளியாகி இருக்கிறது. சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம்' படங்க... மேலும் பார்க்க

``யூடியூபுக்கே முழு நேரம் செலவழிக்க வேண்டியதாகிடுச்சு; ஆனா இப்போ...''- சித்ரா லட்சுமணன் கம்பேக்!

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், திரைப்பட விமர்சகர் என முகமாக ஜொலிப்பவர் சித்ரா லட்சுமணன். `பிரம்மச்சாரி' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள... மேலும் பார்க்க