செய்திகள் :

TNPL 2026 Final: 'இறுதிப்போட்டியில் இப்படி ஓர் ஆதிக்கமா?' - மதுரையை வீழ்த்தி சாம்பியனான கோவை!

post image

இறுதிப்போட்டி என்றாலே பரபரப்பு இருக்கும் அதுவும் கோப்பையை முடிவு செய்யும் ஆட்டம் என்றால், கடைசி பந்து வரை யார் பக்கம் ஆட்டம் திரும்பும் என்று கணிக்க முடியாது. ஆனால் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த TNPL 2026 இறுதிப்போட்டியில், அந்தக் கணக்கு வேறு மாதிரி எழுதப்பட்டது. முதலில் பேட்டிங்கில் 182 ரன்கள் குவித்த கோவை கிங்ஸ், அடுத்து மதுரை பாந்தர்ஸை வெறும் 98 ரன்களுக்கு சுருட்டி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், பாலசுப்ரமணியம் சச்சின் - ஆண்ட்ரே சித்தார்த் இணை களத்தில் நிலைத்து நின்றது.

TNPL 2026 Final
TNPL 2026 Final

இருவரும் சேர்ந்து 117 ரன்கள் குவித்து கோவையின் இன்னிங்ஸை வலுப்படுத்தினர். சச்சின் 39 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஆண்ட்ரே சித்தார்த் தனது அதிரடியைத் தொடர்ந்தார். 47 பந்துகளில் 82 ரன்கள்! 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசிய ஆண்ட்ரே சித்தார்த், இறுதிப்போட்டியில் கோவை அணிக்கு தேவையான வேகத்தை கொடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்தின் காரணமாக கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. மதுரை தரப்பில் பி. சரவணன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரைக்கு ஆரம்பமே அதிர்ச்சி. தொடக்க வீரர்கள் ராம் குமார், சித்தார்த் மகாதேவன் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். என்.எஸ். சதுர்வேத் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து போராடினார். ஹரி ராகவேந்திரா 24 ரன்களும், கேப்டன் அனிருத் 24 ரன்களும் எடுத்தனர். ஆனால், கோவையின் பந்துவீச்சுக்கு முன்பு அந்தப் போராட்டம் நீடிக்கவில்லை.

ஆண்ட்ரே சித்தார்த்- ஆட்டநாயகன் விருது பெற்றவர்

14.2 ஓவர்களில் மதுரை அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோவை தரப்பில் மணிமாறன் சித்தார்த், ஷாருக்கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ், TNPL 2026 சாம்பியன் ஆனது. இறுதிப்போட்டியில் 82 ரன்கள் விளாசிய ஆண்ட்ரே சித்தார்த் ஆட்டநாயகனாகவும், தொடரில் 428 ரன்கள் குவித்த பாலசுப்ரமணியம் சச்சின் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை... இந்தியா - ஜப்பான் மோதும் டி-20!

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா - ஜப்பான் அணிகள் சர்வதேச டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன.வரும் செப்டம்பர் 22-ம் தேதி, ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைத... மேலும் பார்க்க

ஷஃபாலி வேகம்; தீப்தி கொடுத்த திருப்பம்! வங்கதேசத்தை வீழ்த்தி மீண்டும் பைனலில் இந்தியா மகளிர் அணி

ஒருபக்கம் ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு… இன்னொரு பக்கம் வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் ஆசியக் கோப்பையின் முதல் அரை... மேலும் பார்க்க

“என்னிடம் ஏதோ ஒன்றை அவர் பார்த்திருக்க வேண்டும்.!” – விராட் கோலி ஆதரவு குறித்து ரஜத் படிதார்!

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், நட்சத்திர வீரர்கள் என பல சிறப்புகள் இருந்தாலும், பல ஆண்டுகளாக அந்த அணியைச் சுற்றியிருந்த ஒரே குறை ஐபிஎல் கோப்பைத... மேலும் பார்க்க

Cricket TV: ஒரே தளத்தில் Live Match, Highlights, Docu; ஆஸ்திரேய கிரிக்கெட் வாரியத்தின் புது முயற்சி!

ஆஸ்திரேலியக் கிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் நோக்கில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) புதிய டிஜிட்டல் ஸ்ட்ரீ... மேலும் பார்க்க

`பெண் பிள்ளையை ஏன் கிரிக்கெட்டுக்கு அனுப்புறீங்க?'- உலக சாதனை படைத்த தீப்தி சர்மாவின் நெகிழ்ச்சி கதை

2026 மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிராக 0 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார் தீப்தி சர்மா. இதன்மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

`எல்லாம் நல்லாத்தானே போச்சு... ஏமாற்றம்!' – கேப்டன் பதவி பறிப்பு குறித்து சூர்யகுமார் யாதவ் வேனனை

இந்திய டி20 அணியின் கேப்டனாக தொடர்ந்து பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பே... மேலும் பார்க்க