Vijay இதைச் செய்யலைன்னா, சவால்களை பட்டியலிடும் Journalist Shabbir Interview
TVK: செல்வப்பெருந்தகையை முந்தும் தவெக வேட்பாளர்; கலக்கத்தில் காங்கிரஸ்; தற்போதைய நிலவரம் என்ன?
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், காலை 9:30 மணி நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் தென்னரசு அதிரடி முன்னிலை பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்து வரும் அவர், தற்போது வரை 10,913 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, 7,430 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.

சுமார் 3,483 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால், அந்தத் தொகுதியில் பெரும் அரசியல் மாற்றம் நிலவுகிறது. செல்வாக்குமிக்க காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை பின்னடைவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆதரவாளர்கள் இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
















