செய்திகள் :

TVK: "திமுகவை எங்கு வைக்க நினைத்தார்களோ? அங்கு வைத்திருக்கிறார்கள்" - சிடிஆர் நிர்மல் குமார்

post image

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், தவெக அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களில் வென்றிருக்கிறது. இந்நிலையில் தவெக நிர்வாகியும், திருப்பரங்குன்றம் தொகுதியின் வெற்றி வேட்பாளருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

தவெக விஜய்
தவெக விஜய்

அப்போது, "ஒட்டுமொத்த மக்களும் கொடுத்த சர்ப்ரைஸ் பார்த்திருப்பீர்கள். இதுதான் மக்கள் அனைவரும் விஜய் மீது வைத்த நம்பிக்கை.

மக்களின் நம்பிக்கையை 100 சதவிகிதம் நிறைவேற்றுவோம். தமிழக மக்கள் திமுகவை எங்கு வைக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அங்கு வைத்திருக்கிறார்கள்.

எவ்வளவு காலம்தான் மக்கள் அநீதியைப் பொறுத்துக்கொள்வார்கள். உங்களுடைய (திமுக) சொந்த விருப்பங்களுக்காக மக்களை ஏமாற்றி இருக்கிறீர்கள்.

அதற்கான விடையைத்தான் தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். 100 சதவிகிதம் சொல்கிறோம். இது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். மக்கள் என்ன நினைத்து வாக்களித்தார்களோ அதை எங்கள் தலைவர் நிறைவேற்றுவார்" என்று பேசியிருக்கிறார்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

தொடர்ந்து ஸ்டாலின் கொளத்தூர் தோல்விக்கு கமல்ஹாசன், "ஸ்டாலின் மீண்டும் போராடுவார், மீண்டும் வெல்வார்'' என்று பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த நிர்மல் குமார், "கமல்ஹாசன் தனிக்கட்சி வைத்திருக்கிறாரா? இல்லை திமுகவில் ஒரு அங்கமா? ரெட் ஜெயன்ட்டின் அங்கமா? என்று தெரியவில்லை. அவருடைய கருத்தை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று தெரிவித்திருக்கிறார்.

கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்?

திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர். அதன்படி கும்பகோணம் மா... மேலும் பார்க்க

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க