செய்திகள் :

TVK: ``நானா துரோகி..? ரூ.5000 கோடி மதிப்பில் 2 தொழிற்சாலை கட்டிவருகிறார் எடப்பாடி!" - செங்கோட்டையன்

post image

விஜய் ஆதரவுடன் முதல்வராகி 5000 கோடி ரூபாய் சம்பாதிக்கத் திட்டமிட்டார் எடப்பாடி பழனிசாமி என செங்கோட்டையன் விமர்சித்திருக்கிறார்.

ஈரோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், ``நடிகர் விஜய்யின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகி, சுமார் ரூ.5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். அந்த முயற்சியை நான் முறியடித்ததால் என் மீது அவருக்கு கோபம் உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவியையும், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் விட்டுக் கொடுத்ததே நான்தான். எனக்குப் பின் கட்சிக்கு வந்து பதவிகளை அனுபவித்துவிட்டு, உழைத்தவர்களையே இப்போது நீக்கி வருகிறார்.

அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

எனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யச் சொல்லும் அளவுக்கு அவர் இறங்கிச் சென்றிருப்பது, அவரது தோல்வி பயத்தைக் காட்டுகிறது. ஏற்கெனவே 10 முறை தோல்வியைக் கண்ட பழனிசாமி என்பார்கள் அவரை. எடப்பாடி பழனிசாமி நாட்டை ஒரு கம்பெனி போல நடத்தப் பார்க்கிறார். அவரின் மகனும், மச்சானும் பதவிக்கு வரத் துடிக்கிறார்கள். இது மக்கள் நலனுக்கான இயக்கம் அல்ல, ஒரு குடும்ப கம்பெனி.

பவானி ஆற்றின் அருகே ரூ.2,000 கோடியிலும், மேட்டூர் அருகே ரூ.3,000 கோடியிலும் ஃபேக்டரி கட்டி வருகிறார். இதனால் ஆற்றுத் தண்ணீர் மாசடைந்து விவசாயிகளும் மக்களும் பாதிக்கப்படப் போகிறார்கள். முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த எனக்கா துரோகி பட்டம்? அவருக்கு அரசியல் களம் தெரியவில்லை. மக்கள் சக்தி இன்று விசில் சின்னத்திற்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது." என்றார்.

வெயிலில் மயங்கிய அதிமுக வேட்பாளர்; மருத்துவமனையில் நலம் விசாரித்த திமுக வேட்பாளர் கோவி.செழியன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் தனி தொகுதி. இங்கு தி.மு.க சார்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ இள... மேலும் பார்க்க

சபரிமலை: ``நுழைவது மட்டும் உரிமையல்ல; பாரம்பர்யத்தைக் காப்பதும் உரிமைதான்" - மத்திய அரசு வாதம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான இந்த அ... மேலும் பார்க்க

'திமுக வெற்றி பெற்றாலும், ஸ்டாலின் முதலமைச்சராக மாட்டார்' - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாவல்

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (09-04-2026) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு என தனி... மேலும் பார்க்க

`கடந்த 5 ஆண்டுகளில் 8,900 கொலைகள்; தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை' - பியூஷ் கோயல்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் என்.டி.ஏ கூட்டணிக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பிரசாரத்தை முன்னெடுத்தார். அதைத் தொடர்ந்து கோவையில் செய்தியாளர... மேலும் பார்க்க

`ஜெயலலிதா டு விஜயகாந்த்' - தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களைத் தோற்கடித்த வேட்பாளர்கள் யார் யார்?

தமிழக அரசியலில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் பெரும் வெற்றி பெற்றாலும், பல முன்னணித் திரை நட்சத்திரங்கள் மக்களிடம் செல்வாக்க... மேலும் பார்க்க