செய்திகள் :

TVK: சைதை 'கிங்' யார்? - அமைச்சருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் தவெக அருள் பிரகாசம்

post image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை சைதாப்பேட்டை தொகுதி மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு தொகுதியாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அருள் பிரகாசம் ஒரு மாபெரும் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார். 2:30 மணி நேர நிலவரப்படி வெளியாகியுள்ள தரவுகளில், தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் 56,008 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் தற்போதைய அமைச்சரும், அத்தொகுதியின் முக்கிய முகமுமான மா. சுப்பிரமணியன் 35,324 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 20,684 ஆக உள்ளது.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்
  1. அருள் பிரகாசம் (தவெக): 56,008 வாக்குகள்

  2. மா. சுப்பிரமணியன் (திமுக): 35,324 வாக்குகள்

  3. ஜி. செந்தமிழன் (அமமுக): 12,157 வாக்குகள்

  4. ஸ்ரீவித்யா (நாம் தமிழர்): 3,945 வாக்குகள்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடர்ந்து இந்தப் பகுதியில் பின்னடைவைச் சந்திப்பது ஆளும் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் இந்த வலுவான முன்னிலை, அத்தொகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும், புதிய தலைமைக்கான மக்களின் ஆதரவையும் தெளிவாகக் காட்டுகிறது. வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையடையாத நிலையில், அருள் பிரகாசத்தின் இந்த 20,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் ஒரு குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்?

திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர். அதன்படி கும்பகோணம் மா... மேலும் பார்க்க

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க