செய்திகள் :

Union Budget: 2019 டு 2026... நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த கால நேரம்! ஒரு டைம்லைன்

post image

தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இன்று அவர் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை கிட்டத்தட்ட 1 மணிநேரம் 30 நிமிடங்களில் தாக்கல் செய்து முடித்திருக்கிறார்.

இதற்கு முன்பு நிர்மலா சீதாராமன் எத்தனை நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்
நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்

2019-ம் ஆண்டு முதல்முறையாக நிதியமைச்சர் ஆனார் நிர்மலா சீதாராமன். அந்த ஆண்டு அவரின் பட்ஜெட் தாக்கல் நேரம் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் ஆகும்.

2020-ம் ஆண்டு 2 மணிநேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இவர். இதுவே இந்திய வரலாற்றில் அதிக நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும்.

2021-ம் ஆண்டு ஒரு மணி 50 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

2022-ம் ஆண்டு ஒரு மணி நேரம் 32 நிமிடங்களிலும், 2023-ம் ஆண்டு 1 மணிநேரம் 27 நிமிடங்களிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இவர்.

2024-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை 56 நிமிடங்கள் தாக்கல் செய்தார். இதுவே இவர் மிக குறைந்த நிமிடங்கள் வாசித்த பட்ஜெட் ஆகும்.

அதே ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தது. அதன் பின், அந்த ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசித்த நேரம் 1 மணிநேரம் 25 நிமிடங்கள்.

2025-ம் ஆண்டு 1 மணிநேரம் 14 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் - தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. 2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களுக்கு என்ன... மேலும் பார்க்க

"விஜய் வாங்கும் சம்பளம் ஒயிட்டில் எவ்வளவு? கருப்பில் எவ்வளவு?" - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “விஜய் அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு எந்தப் பொறாமையும் கிடையாது. அவர் கொடுக்கும்... மேலும் பார்க்க

தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! - அவரின் 6 சாதனைகள் இதோ!

இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்தப் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது இவர் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். இது வரலாற... மேலும் பார்க்க

கருப்பை வாய் தடுப்பூசி: தமிழக அரசின் சலுகை என்ன? யாரெல்லாம் பயன்படுத்தலாம்? - மருத்துவர் விளக்கம்!

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் புதிதாகக் கண்டறியப்பட்டு வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய... மேலும் பார்க்க

Epstein File-ல் மோடியின் பெயர்; பூகம்பம் கிளப்பும் அமெரிக்கா; மத்திய அரசின் பதில் என்ன?

எப்ஸ்டீன் ஃபைல் - இது ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்கிற பாலியல் குற்றவாளியின் ஆவணம் ஆகும். இவர் பாலியல் குற்றவாளி மட்டுமல்ல... உலகில் உள்ள பல அரசியல்வாதிகள், பிசினஸ்மேன்களுக்கு சிறுமிகளை பாலியல் உறவிற்காக சப்ள... மேலும் பார்க்க

கொல்கத்தா: "ஆட்டிறைச்சிக்குப் பதில் மாட்டிறைச்சி" - யூடியூபர் புகார்; சர்வர் கைது; பின்னணி என்ன?

பிரபல யூடியூப்பரும், பெங்காலி நடிகருமான சாயக் சக்ரவர்த்தி தனது நண்பர்கள் சிலருடன் கொல்கத்தாவில் உள்ள பிரபலமான ஒலிபப் பார் அண்ட் ரெஸ்டாரண்டிற்குச் சாப்பிட சென்றார். அவர்கள் மட்டன் ஆர்டர் செய்திருந்தனர்... மேலும் பார்க்க