உக்ரைன் - ரஷ்யா: "20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும்" - உக்ரைன் அதிபர...
Vijay: "அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுகவை ஆரம்பித்தார்" - விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில்
கடந்த வாரம் விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதை நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், "மகளிர் உதவித்தொகை கொடுக்கவே முடியாது எனச் சொன்னார்கள். அதையும் கொடுத்திருக்கிறோம். தற்போது மகளிர் உதவித் தொகையுடன் சிறப்பு தொகுப்பாக ரூ. 5000 கொடுத்திருப்பது பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது'' என்றார்.
சேலத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, "யார் கூட்டத்தை நடத்தினார்களோ அவர்கள்தாம் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தாம் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.

தன்னுடைய அரசியலின் தாக்கத்தால்தான் உரிமைத் தொகையை அரசு தருவதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, "அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுக கட்சியை ஆரம்பித்தார் தெரியுமா?" எனத் துணை முதலமைச்சர் உதயநிதி கிண்டலாகப் பேசினார்.












