செய்திகள் :

Vijay: ``முதல்வர் விஜய் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார்’’ - அமைச்சர் செங்கோட்டையன்

post image

வேலூரில், அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் ஆட்சியில், எல்லாத் துறைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் பகுதிகளில் சுழன்று பணியாற்றி வருகிறோம்.

தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை நடத்துவதற்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார். `மக்களுடைய வரிப்பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட இந்த அரசின் சார்பாகச் சிந்தாமல், சிதறாமல் பணிகள் நடைபெறும்’ என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

ஜாதி, மத பாகுபாடின்றி எல்லோரும் சமம். அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். முதலமைச்சர் விஜய் தொலைநோக்கு சிந்தனையோடு நலத் திட்டங்களை உருவாக்கி வருகிறார். வரலாறு படைக்கிற தலைவராக, இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டியாகத் திகழும் தலைவராக விஜய் விளங்கி வருகிறார்.

இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டியிடுவதால் எங்களுக்குப் பின்னடை வராது. ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்தக் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால், எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை’’ என்றார்.

"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்..." - கனிமொழி சந்தோஷ் கண்டனம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும... மேலும் பார்க்க

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றக் கோரி போராட்டம்; தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.இது தொடர்பாக ... மேலும் பார்க்க

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்: ``ஸ்டாலின் என்னுடன் ஆலோசனை நடத்தினார்" - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக-வின் 22-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``2005-ம் ஆண்டு கேப்டன் வ... மேலும் பார்க்க

பெரியார், அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: "யாரைத் திருப்திப்படுத்த?" - உதயநிதி கேள்வி

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடத்த, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அதற்கு குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர்... மேலும் பார்க்க

``அது அவங்க DNA-லயே இருக்கு..." - திமுக குறித்து அமைச்சர் ரமேஷ்

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், தொழில் முதலீடுகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்கள் மற்றும்... மேலும் பார்க்க