செய்திகள் :

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

post image

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Vishwanath & Sons
Vishwanath & Sons

வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் தேங்க்ஸ் மீட் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மமிதா பைஜூ பேசுகையில், "நீங்க இன்னும் 'விஸ்நாத் & சன்ஸ்' படம் பார்க்கலன்னா, தயவுசெஞ்சு தியேட்டர்ல போய் பாருங்க. ஏன்னா, தியேட்டரை விட்டு வெளிய வரும்போது மனசுக்குள்ள ஒரு நிறைவு கிடைக்கும்.

படத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டினாங்க, அதுல மறக்க முடியாத நினைவுகள் நிறையவே இருக்கு. ஆனா, என்னை ரொம்பவே நெகிழ வச்ச ஒரு விஷயம் இருக்கு. ஒரு ரெண்டு மூணு வீடியோக்கள் நான் பார்த்தேன்.

Mamitha Baiju
Mamitha Baiju

அதுல சின்னக் குழந்தைகள் எல்லாம் திரையரங்குல 'பட்டாம்பூச்சி' பாட்டு வரும்போதும், என்னுடைய நகைச்சுவைக் காட்சிகளின்போதும் சிரிச்சு மகிழ்ந்து, தியேட்டர் சீட்ல இருந்து எந்திரிச்சு கொண்டாடினாங்க.

அவங்களைப் பார்த்ததும் எனக்கு என்னுடைய பழைய நினைவுகள்தான் ஞாபகம் வந்தது. ஒரு 10-15 வருஷத்துக்கு முன்னாடி, நான் தியேட்டருக்குப் போய் ஒரு நல்ல படத்தையோ அல்லது எனக்குப் பிடிச்ச ஒரு கதாபாத்திரத்தையோ பார்த்து எப்படி கொண்டாடினேனோ, அதே மாதிரி இப்போ சின்னக் குழந்தைகள் என் படத்தைக் கொண்டாடுறதைப் பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது.

அந்த உணர்வை வார்த்தைகளால சொல்லி விவரிக்கவே முடியாது" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க

Ramadoss Biopic: ``அப்பா மகன் சண்டையால் கைவிடப்பட்டு, எங்கள் உழைப்பு வீண்" - இயக்குநர் சேரன் ஆதங்கம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு (பயோபிக்) திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், இதனால் தங்களின் ஒன்றரை ஆண்டு கால உழைப்பு வீணாகிவிட்டது என்றும் இயக்குநர் சேரன் ஆதங்கத்த... மேலும் பார்க்க