செய்திகள் :

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

post image

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த வீட்டை திறந்து சோதனை செய்தபோது, உள்ளே அந்த வீட்டில் வசித்து வந்த ரியா என்ற பெண் கழுத்தை அறுத்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவர் உடலில் தலை இல்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து வீடு முழுக்க சோதனை செய்து பார்த்தபோது, அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டியில் ரியாவின் தலை இருந்தது.

வீட்டில் ரியாவின் கணவர் ராமானுஜ் இல்லை. இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து இருந்தது. கொலை குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமானுஜ்ஜை தேடி வந்தனர். இந்நிலையில் ராமானுஜ் போலீஸில் சரணடைந்தார்.

அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கோர்ட்டிற்கு வெளியில் ராமானுஜ் அளித்த பேட்டியில், ''நான் என் மனைவியைக் கொலை செய்து விட்டேன்.

எனது சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த பிறகு சுகர் டேடியையும் கொலை செய்வேன்'' என்று தெரிவித்தார். உடனே பத்திரிகையாளர்கள் சுகர் டேடி யார் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அதனை தெரிவிக்க மறுத்த ராமானுஜ், பத்திரிகையாளர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். கொலைக்கான நோக்கம் குறித்தும், சுகர் டேடி யார் என்பது குறித்தும் போலீஸார் ராமானுஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க

மதுரையில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு; 'ஆணவக்கொலையா?' - போலீஸார் தீவிர விசாரணை

மதுரை மாநகர் கூடல்நகர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த யோகலெட்சுமி - கருப்பசாமி தம்பதியினரின் மகனாக தமிழ்செல்வன் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்துள்... மேலும் பார்க்க

திருமணம் தாண்டிய உறவு; பெற்ற தாயால் கொல்லப்பட்ட 2 சிறுவர்கள்; நெஞ்சை உலுக்கும் `பகீர்’ பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்தக் கிணற்றில், கடந்த ஆகஸ்ட் மாதம் 3... மேலும் பார்க்க