செய்திகள் :

Yalda Hakim: பாகிஸ்தான் அமைச்சர்களை நேரலையில் அலறவிட்ட நிருபர் - யார் இந்த யால்டா ஹக்கீம்?

post image

ஆப்கானிஸ்தானை சேர்ந்த யால்டா ஹக்கீம், மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளுடனான தனது அதிரடியான, தயக்கமற்ற நேர்காணல்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். ‘ஸ்கை நியூஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் யால்டா ஹக்கீம் சமீபத்தில் நடத்திய நேர்காணல் ஒன்றில், பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் மறுப்பது குறித்து அந்நாட்டு தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தராரிடம் கேள்வி எழுப்பினார்.

yalda hakim
yalda hakim

“பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக கூறியதை அடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதற்கு நேர்மாறாகக் கூறியதை அவருக்கு ஹக்கீம் நினைவூட்டினார்.

“எனது பேட்டியில், ஒரு வாரத்திற்கு முன்பு உங்கள் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், பாகிஸ்தான் பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்தல், ஆதரவளித்தல் மற்றும் பிரதிநிதிகளாகப் பயன்படுத்துதல் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதை நான் உங்களுக்குச் சுட்டிக்காட்டலாமா?” என்று ஹக்கீம் மேற்கோள் காட்டி கூறினார்.

முந்தைய நேர்காணல் ஒன்றில், ஹக்கீமிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆசீப், “நாங்கள் சுமார் மூன்று தசாப்தங்களாக அமெரிக்காவுக்காக இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறோம்... அது ஒரு தவறு, அதற்காக நாங்கள் துன்பங்களை அனுபவித்தோம்” என்று ஒப்புக்கொண்டார்.

“2018-ம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக கூறி ராணுவ உதவியை நிறுத்தினார். எனவே பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லை என்று நீங்கள் கூறுவது, ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் கூறியதற்கும், பெனாசிர் பூட்டோ கூறியதற்கும், உங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒரு வாரத்திற்கு முன்பு கூறியதற்கும் நேர் எதிராக இருக்கிறது” என்று தராரிடம் ஹக்கீம் கூறினார்.

yalda hakim
yalda hakim

இந்த நேர்காணல்களின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் யால்டா ஹக்கீமை பாராட்டி வருகின்றனர்.

யால்டா ஹக்கீம் - யார் இவர்?

யால்டா ஹக்கீம் ஆப்கானிஸ்தானின் காபூலில் பிறந்தவர். அவர் குழந்தையாக இருந்தபோது அவர்களது குடும்பம் அகதியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றது. தற்போது, ​​ஸ்கை நியூஸ் சேனலில் ‘தி வேர்ல்ட் வித் யால்டா ஹக்கீம்’ என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குகிறார்.

முன்னதாக பிபிசி நிறுவனத்தில் முன்னணி தொகுப்பாளராக பணியாற்றினார். காசா, உக்ரைன், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவர் நேரடி செய்திகளை வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஊடக அமைதி விருது

2009-ம் ஆண்டுக்கான சிறந்த ஆஸ்திரேலிய தொலைக்காட்சி செய்தி தொகுப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஆஸ்திரேலிய ஊடக அமைதி விருதை அவர் பெற்றார். மேலும், வாக்லி இளம் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் விருதுக்கான இறுதிப் போட்டியாளராகவும் இருந்துள்ளார்.

யால்டா ஹக்கீம் அறக்கட்டளை என்ற பெயரில், ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்வி உதவியையும் செய்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் முன்னேற்றத்துக்காக அவரது இந்த அறக்கட்டளை பல்வேறு உதவிகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Miyazaki Mango: வைரத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும்... மேலும் பார்க்க

India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அரசு | Fact check

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள், 26 பேரை சுட்... மேலும் பார்க்க

`சீனர்களிடம் எங்களை விற்றுவிட்டனர்’ - லாவோஸ் சைபர் கிரைம் கும்பலிடமிருந்து தப்பியவர்கள் கண்ணீர்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான இணையத்தள குற்றங்கள் நடக்கிறது. இந்த இணையத்தள குற்றங்களை நடத்துபவர்கள் ஒரு நாட்டில் இருந்து கொண்டு மற்றொரு நாட்டில் செயல்படுகின்றனர். இதனால் அவர்களை கைது செய்வது எ... மேலும் பார்க்க

Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந்த பெற்றோர் உருக்கம்

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முரளி நாயக்(23) என்ற வீரர் வீர மரணம் அடைந்தார்.முரளி நாயக் பெற்றோருக்குச் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீர... மேலும் பார்க்க

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: "ஒரு பெண் முடியாது எனச் சொன்னால் முடியாதுதான்" -மும்பை நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம்... மேலும் பார்க்க

ஒட்டிப் பிறந்த சகோதரிகளைக் கைவிட்ட பெற்றோர்; 13 ஆண்டுகளாக வளர்க்கும் மருத்துவமனை; நெகிழ்ச்சி பின்னணி

மும்பையில் உள்ள வாடியா மருத்துவமனை குழந்தைகளுக்கானது. இம்மருத்துவமனையில் பன்வெல் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு உடம்பின் கீழ்ப் பகுதி ஒட்டிய நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.அக்குழந்தைகளைத் தனித்தனியா... மேலும் பார்க்க