ஐஸ்வர்யா ராய்: "பொறுத்துக்கொள்ள முடியாது" - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபி...
அதிகரிக்கும் கடைசிநேர திருமண ரத்து; ஒரே ஆண்டில் ரூ.45 கோடி இழப்பு- ம.பி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 40 நாட்களில் 150 திருமணங்கள் கடைசி நேரத்தில் நின்று போய் இருக்கிறது என்றும் இதில் பெரும்பாலான திருமணங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்த வந்த பதிவுகளால்தான் ரத்தாகி இருக்கிறது எனும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தூர் மற்றும் குஜராத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இத்திருமணத்திற்கு முன்பு புகைப்படம் எடுக்க தம்பதி திட்டமிடப்பட்டு இருந்தது. தம்பதி போட்டோ எடுத்துக்கொண்டிருந்தபோதே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகளின் சமூக வலைத்தள பக்கத்தில் அவரது முன்னாள் காதலனுக்கு அனுப்பிய பதிவுகளால் அவர்களின் திருமணம் நின்று போனது. இதே போன்று கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு தம்பதிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருமண மண்டபத்திற்கு அலங்காரத்திற்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்திருந்தனர். ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகள் திடீரென மாயமாகிவிட்டார். அதன் பிறகு அது குறித்து விசாரித்தபோது அப்பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதே போன்று போபால் ருக்மனி வித்தல் கார்டனில் ஒரே மாதத்தில் 3 திருமணங்கள் கடைசி நேரத்தில் நின்று போனது. கடைசி நேரத்தில் திருமணம் நின்று போவதால் குடும்பங்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை.
திருமணத்திற்கு தேவையான உணவு, மேடை அலங்காரம் போன்ற சேவைகளை வழங்கிய நபர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். திருமணம் நின்று போனால் அதன் பிறகு அப்பணத்தை சம்பந்தப்பட்ட குடும்பத்திலிருந்து வாங்குவது மிகவும் கடினம் என்று பாதிக்க வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
திருமணங்கள் ரத்து மூலம் ஒரே ஆண்டில் ரூ.45 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய பிரதேச ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் சூரி தெரிவித்தார். மும்பையை சேர்ந்த ஒரு வாலிபருக்கு சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமகன் வீட்டார் சென்னையில் தங்கி வேலை செய்யும் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு தேவையான உடைகளை வாங்கிக்கொண்டு ரயில் நிலையத்திற்கு சென்றபோது மணமகனின் மொபைல் போனை மணப்பெண் சோதனை செய்தததால் அத்திருமணம் நின்று போனது.
மணமகன் தனது முன்னாள் காதலிக்கு சமூக வலைத்தள பக்கத்தில் தகவல் அனுப்பி இருந்ததை மணமகள் கண்டுபிடித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இத்திருமணம் நின்றுவிட்டது. இது குறித்து மணமகனின் தந்தையிடம் பேசியபோது,''திருமணத்திற்கு முன்பே இருவரும் பிரிந்ததில் எங்களுக்கு எந்த வித வருத்தமும் இல்லை. திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்'' என்று தெரிவித்தார்.


















