செய்திகள் :

"அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்!" - 8 மணி நேர பணி குறித்து துல்கர் & ரானாவின் கருத்து என்ன?

post image

சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக பெருமளவில் பேசப்பட்டு வருகின்றது.

நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்தார்.

இவருடைய கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் முக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் பேசி வருகிறார்கள்.

Deepika Padukone
Deepika Padukone

ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்காக அதன் ஆசிரியர் அனுபமா சோப்ரா, 2025-ம் ஆண்டின் முன்னணி தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ரவுண்ட் டேபிள் நேர்காணல் நடத்தியிருந்தார்.

அதில் நடிகர்கள் துல்கர் சல்மானும், ரானாவும் இந்த 8 மணி நேரப் பணி குறித்து அவர்களுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்கள்.

அந்த நேர்காணலில் ரானா, "சினிமா என்பது வேலை இல்லை. இது ஒரு லைஃப்ஸ்டைல். இதில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தனித்தன்மைகளைக் கொண்டிருக்கும். அதைக் குறிப்பிட்ட நேர அட்டவணைக்குள் அடைக்க முடியாது.

தொழிற்சாலையைப் போல அசெம்பிளி லைன் அணுகுமுறை கதை சொல்லலைப் பாழாக்கிவிடும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலையைச் செய்தால் தானாக சிறந்த காட்சி வந்துவிடும் என்று கிடையாது.

தெலுங்கு சினிமாவில் இப்போது பல முன்னணி நடிகர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவதால் பட்ஜெட்டைக் கட்டுப்படுத்தவும், ஷூட்டிங்கை விரைவாக முடிக்கவும் முடிகிறது.

பெரிய நட்சத்திரங்கள் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளையும் சொகுசையும் குறைப்பது அவர்களது பொறுப்பு" என்றார்.

Rana Daggubati
Rana Daggubati

அவரைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான், "மலையாள சினிமாவில் பட்ஜெட் சிறியதாக இருப்பதால் நீண்ட தொடர் ஷெட்யூல்களையே பின்பற்றியிருக்கிறோம்.

இடைவெளி அதிகம் இல்லாமல் விரைவாக ஷூட்டிங்கை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால் தெலுங்கு படங்களில் பணிபுரியும் போது பெரிய பட்ஜெட், சிறந்த திட்டமிடல் இருப்பதால் பெரும்பாலும் மாலைக்குள்ளேயே பேக் அப் ஆகிவிடும். எல்லாம் ஒழுங்காக, கட்டமைக்கப்பட்ட விதத்தில் நடக்கும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை என்பது எப்போதும் பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை.

ஒரு நாளைக்கு சில மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்வது, மற்றொரு முழு நாள் ஷூட்டிங் செய்வதைவிட குறைவான பணமே செலவாகும்." எனக் கூறியிருக்கிறார்.

`இஷா தியோல் வயிற்றில் இருந்தபோதுதான் தர்மேந்திராவின் தாயாரை சந்தித்தேன்!’ - ஹேமாமாலினி

பா.ஜ.க எம்.பி.யும் நடிகையுமான ஹேமாமாலினி தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் பாலிவுட்டிற்கு சென்று பிரபலம் அடைந்தார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடிகர் தர்மேந்திராவை அவர் திருமணமும் செய்து க... மேலும் பார்க்க

"இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான்" - நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!

'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ்.சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் ந... மேலும் பார்க்க

``என்னை மன்னிசுடுங்க'' - சர்ச்சையை உருவாக்கிய `காந்தாரா' நடிப்பு; மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

கோவாவில் கடந்த 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் சில அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி, ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட சினி... மேலும் பார்க்க

``திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' - நடிகை ஜெயா பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் அடிக்கடி பத்திரிகையாளர்களிடம் கோபப்படுபவர். பத்திரிகையாளர் பர்கா தத்தின் ''வீ தி வுமன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயா பச்சன் பேசும்போது சில தகவல்... மேலும் பார்க்க

Tere Ishq Mein Review: `எங்கயோ பார்த்திருக்கேன்!' - பாலிவுட் ஹிட் வரிசையை தக்க வைக்கிறாரா தனுஷ்?!

ஷங்கரும் (தனுஷ்), வழக்கறிஞராக இருக்கும் அவருடைய தந்தையும் தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தவர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது அடி, தடி, உதை என கெத்து டிராகனாக வலம் வருகிறார் ... மேலும் பார்க்க