சுசீந்திரம்: தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழ என்ன காரணம்? ...
"அதை 60 நாள்கள் படமாக்கினோம்"-'வாரணாசி' படம் குறித்து ராஜமெளலி
ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.
கதாநாயகியாக 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. 6-ம் நூற்றாண்டின் வாரணாசி, எரி கல் அண்டார்டிகா பனி பிரதேசம், ஆப்பிரிக்கா காடுகள், த்ரேதா யுகத்தில் இராமாயண புராணத்தில் இலங்கையில் நடக்கும் யுத்தக் களம், ராமர் வில் ஒளியில் இருந்து வரணாசி நகரம், திரிசூலத்தை ஏந்தியபடி மகேஷ் பாபு, காளை மீது அமர்ந்து வரும் படத்தின் போஸ்டர் மற்றும் அறிமுக டீசர் வெளியாகியிருக்கிறது.
இதில் 'வாரணாசி' படம் குறித்துப் பேசியிருக்கும் இயக்குநர் ராஜமெளலி, "என் சிறுவயதிலிருந்தே 'ராமாயணம்' மற்றும் 'மகாபாரத' இதிகாசங்களை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். 'மகாபாரதம்' எனது கனவுப் படம்.
இந்த வாரணாசி படத்தில் பணிபுரியத் தொடங்கியபோது, ராமாயணத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை நான் படமாக்குவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை.
இப்படத்திற்காக முதல் நாள், ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அதில் மகேஷ் பாபு ராமர் கெட்டப்பில் மேக்கப் போட்டதைப் பார்த்து உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. அந்தப் புகைப்படத்தைத்தான் நான் கொஞ்ச நாள் என் மொபைல் வால்பேப்பராக வைத்திருந்தேன்.

இந்த இராமாயண எபிசோடை 60 நாள்கள் படமாக்கினோம். ஒவ்வொரு நாளும் ஒரு சவாலாக இருந்தது. இது எனக்கும் மகேஷ் பாபுவுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். உங்கள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மகேஷ் பாபு இதில் ராமராக நடித்திருக்கிறார். இந்த இராமாயண எபிசோடை எடுக்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்" என்று 'வாரணாசி' படம் குறித்துப் பேசியிருக்கிறார்.


















