அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்கு...
`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்
குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீஸில் புகார் செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் காணாமல் போன ரமேஷ் நண்பர் கிஷோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் ரமேஷை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இக்கொலையில் மைனர் வாலிபர் ஒருவரும் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரின் விசாரணையில், ரமேஷ் கடந்த 8 மாதங்களாக திருமணமான பெண் ஒருவருடன் உறவு வைத்திருந்தார். இந்த விசயம் அவரது நண்பரான கிஷோருக்கு தெரிய வந்தது. கிஷோர் தனது நண்பரிடம் தானும் அப்பெண்ணிடம் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதோடு இது தொடர்பாக அப்பெண்ணுக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் போட்டுள்ளார். ரமேஷுடன் தொடர்பில் இருப்பது போன்று என்னிடமும் தொடர்பில் இருக்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். அதோடு ரமேஷ் அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்தது கிஷோருக்கு பொறாமையை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட பெண் கிஷோர் மெசேஜ் செய்தது குறித்து ரமேஷிடம் தெரிவித்தார். உடனே கிஷோரிடம் ரமேஷ் இது குறித்து விசாரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷை கொலை செய்ய கிஷோர் திட்டமிட்டார். இதற்காக ரமேஷை ஊருக்கு வெளியில் அழைத்து சென்றுள்ளார். அங்கு மைனர் ஒருவருடன் சேர்ந்து ரமேஷை கிஷோர் கொலை செய்தார்.
பின்னர் கத்தியால் தலை உட்பட உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி அதனை போர்வெல்களில் போட்டார். எஞ்சிய பகுதியை ஒரு இடத்தில் புதைத்திருந்தார்'' என்று போலீஸார் தெரிவித்தனர். அந்த உடல் பகுதியை போலீஸார் தோண்டி எடுத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
















