செய்திகள் :

இனி வரும் காலத்தில் AI வளர்ச்சியால் வாரத்தில் 3 நாள் மட்டுமே வேலையா?- அமேசான் நிறுவனர் சொன்னது என்ன?

post image

இன்றைய செயற்கை நுண்ணறிவின்(AI) வளர்ச்சி வரும் காலங்களில் மக்களின் வாழ்க்கை முறையினை மாற்றக்கூடும் என்று அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது . AI வைத்து உற்பத்தி திறனை அதிகரிக்கும் செயல் மூலம், வரும் காலங்களில் சிலர் வாரத்தில் மூன்று நாள் மட்டும் வேலைக்கு சென்று குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும் என்று அவர் கணித்துள்ளார்

தனியார் செய்தி நிகழ்ச்சியில் பேசிய அவர், AI தொழில்நுட்பமானது வேலைகளை வேகமாகவும் திறமையாகவும் செய்து முடிக்க உதவும் என்றதோடு மட்டும் அல்லாமல் இதன் மூலம் சில குடும்பங்களில் இருவர் சேர்ந்து வேலைக்கு செல்ல வேண்டிய தேவை குறையலாம் என்றும், ஒருவரின் வருமானத்திலேயே குடும்பத்தை நன்கு நடத்தும் சூழல் உருவாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

AI -யின் இந்த தீவிர வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் குறையும் என்ற அச்சம் நிலவும் நிலையில், அதே தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தித்திறன் உயர்வதோடு , மக்கள் குறைவான நேரத்தில் வேலையை செய்து முடிக்கும் வாய்ப்பும் உருவாகலாம் என்பது பெசோஸின் பார்வை. மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் குறையக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

AI

AI வளர்ச்சியால் எதிர்காலத்தில் வாரத்தில் மூன்று நாள் வேலை செய்யும் சூழல் உருவாகக்கூடும் என்பது ஜெஃப் பெசோஸின் கணிப்புதான் . இந்த மாற்றம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த காலக்கெடுவை அவர் குறிப்பிட்டுக் கூறவில்லை .

இந்த AI தொழில்நுட்பம் உண்மையில் வேலை நேரத்தைக் குறைக்குமா அல்லது வேலைவாய்ப்புகளில் புதிய சவால்களை மேலும் உருவாக்கக்கூடுமா என்பது, அதன் பயன்பாடு மற்றும் பொருளாதார மாற்றச் சூழலை பொறுத்தே அமையும்.

AI-ல் உருவாக்கப்பட்ட போட்டோவா? இனி கண்டுபிடிக்கலாம்... Check வைத்த Google!

ஒரு போட்டோவைப் பார்க்கும்போது இது உண்மையாக எடுக்கப்பட்டதா… அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் வருகிறதா? குறிப்பாக சமூக வலைதளங்களில் AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் நாளு... மேலும் பார்க்க

திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் மண்ணரிப்பைத் தடுக்க Gabion Wall தொழில்நுட்பத்தில் தடுப்புச் சுவர்!

திருச்சி திருவானைக்காவல், திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சென்னை நேப்பியர் பாலம் வடிவிலான புதிய பாலம் ஒன்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது... மேலும் பார்க்க

'சுவிட்ச் அழுத்தினால் ஆட்டோ' - விபத்தை தடுக்க கேரள ஓட்டுநர்கள் ஏற்படுத்திய சிம்பிள் தொழில்நுட்பம்

கேரள மாநிலம் கொச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளின் வசதிக்காக எளிய ‘வயர்லெஸ் காலிங் பெல்’ தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். அது தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.​ தேசிய நெடுஞ்சாலை 66... மேலும் பார்க்க

MIT-யை விட்டு வெளியேறிய 19 வயது இளைஞர்... இன்று Meta-வின் AI பொறுப்பு! - அலெக்ஸாண்டர் வாங் யார்?

எம்.ஐ.டி படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுத் தொழில்நுட்பத் துறையில் நுழைந்து, இன்று உலகத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளார் அலெக்ஸாண்டர் வாங்... மேலும் பார்க்க

`இனி 28 நாள்கள், 84 நாள்கள் Recharge Pack எல்லாம் கிடையாது!' TRAI-ன் புதிய 'நிம்மதி' அறிவிப்பு

மொபைல் போன் ரீசார்ஜ் பேக்கேஜ்களில் பெரும்பாலான திட்டங்கள் 28 நாள்கள், 84 நாள்கள் என ரவுண்டாக இல்லாமல்தான் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், போன் பேசினால் மட்டும் போதும் என்பவர்கள் கூட, டேட்டா பேக்கேஜையும... மேலும் பார்க்க

``ஆய்வகத்துக்குள் இருந்த அறிவியல்… மக்கள் பார்வைக்கு!" - காரைக்குடி CECRI Open Day

ஒருபக்கம் Battery, Electrochemistry, Materials Science, Corrosion, Electrocatalysis, Green Hydrogen, Machine Learning என பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கங்கள்… இன்... மேலும் பார்க்க