செய்திகள் :

இன்று தமிழ்நாடு முதல்வராகிறார் `ஜோசப் C விஜய்' - ஏற்பாடுகள் தீவிரம்! | Live Updates

post image

விஜய்க்கு திருமா வாழ்த்து

இன்று தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்கும் தவெக தலைவர் விஜயிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் திரு.விஜய் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்".

தமிழ்நாடு முதல்வராகிறார் விஜய்

கடந்த மே 4-ம் தேதியே தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. பெரும்பாலான இடங்களைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது தவெக.

ஆக, இந்தக் கட்சிகள் எல்லாம் ஆதரவு தர, நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்.

பெரும்பான்மையை நிரூபித்ததும் நேற்று அர்லேகர் ஆட்சியமைக்க விஜயை அழைத்தார்.

இதையடுத்து இன்று தமிழ்நாடு முதல்வராகிறார் ஜோசப் C விஜய்.

இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக பதவியேற்கிறார் விஜய்.

இந்த நிகழ்வில் பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி.

விஜய்
விஜய்

TVK: "சட்டியிலிருந்து தப்பி அடுப்பில் விழுந்த கதையாக" - விஜய் பதவியேற்பு குறித்து மார்க்கண்டேய கட்ஜு

இன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிறார் தவெக தலைவர் விஜய். இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது எக்ஸ் பதிவில் வி... மேலும் பார்க்க

முதல்வராகும் விஜய் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் யார் யார்? உத்தேச பட்டியல்!

இன்று காலை 10 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்கிறார் தவெக தலைவர் விஜய். இவருடன் அமைச்சர்களாக யார் பொறுப்பேற்க உள்ளனர் என்கிற கேள்வி பரவலாக இருந்து வருகிறது. இப்போது வரை கிடைத்... மேலும் பார்க்க

"தவெக ஆட்சியில் 'இவர்கள்' கையில் தான் கல்வித்துறை இருக்க வேண்டும்" - ஆளூர் ஷா நவாஸ்

சுமார் 4 நாள்களுக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு நேற்று ஆதரவு அளித்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் வ... மேலும் பார்க்க

TVK: `கீதை' சர்ச்சை; மன்மோகன், மோடி சந்திப்பு; `அணில்' பின்கதை! - முதல்வராகும் முன்பு VIJAY அரசியல்!

`சி.ஜோசப் விஜய் எனும் நான்...' - இந்த வாக்கியத்தை கேட்கத்தான் கடந்த நான்கு நாள்களாகக் காத்துக் கொண்டிருந்தார்கள் விஜய்யின் தொண்டர்கள். பெரும்பான்மை இல்லாததால் பெரும் போராட்டத்துக்குப் பிறகு, இன்று தமி... மேலும் பார்க்க

TVK: 'குஜராத் நிலநடுக்கம், ஜல்லிக்கட்டு...'- அடித்தளம் முதல் அரியணை வரை; விஜய்யின் அரசியல் டைம்லைன்!

தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்று சாதித்திருக்கிறது. ஆனாலும், பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கலும் ஏற்பட்டது. இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்... மேலும் பார்க்க