செய்திகள் :

ஈரான் மீதான தாக்குதல்: இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துகிறதா அமெரிக்கா? - உண்மை என்ன?

post image

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு எதிர்த்தாக்குதல்களும் நடந்துவருகின்றன. அதனால் மத்தியக் கிழக்கு நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா தக்குதல் நடத்தியதும் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் முன்னாள் கர்னல் டக்ளஸ் மேக்ரிகோர் அமெரிக்கா செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``எங்கள் தளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எங்கள் துறைமுக நிறுவல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்தியா: அமெரிக்க வெளியுறவுத்துறை
இந்தியா: அமெரிக்க வெளியுறவுத்துறை

நாங்கள் உண்மையில் இந்தியா மற்றும் இந்திய துறைமுகங்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இது சிறந்த முன்னெடுப்பல்ல எனக் கடற்படை சொல்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ராணுவ கர்னலின் இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்திருக்கிறது. வெளியுறவு அமைச்சக உண்மை சரிபார்ப்பு பக்கம், ``அமெரிக்க கடற்படையால் இந்திய துறைமுகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சேனலான OAN இல் கூறப்படும் கூற்றுக்கள் போலியானவை, தவறானவை. இது போன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துகளுக்கு எதிராக எச்சரிக்கிறோம்" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“நெருக்கடி கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்”- எப்படிச் சமாளிக்கப் போகிறது திமுக?

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இறுதிசெய்த தி.மு.க-வுக்கு அடுத்த சிக்கல் பிற கூட்டணிக் கட்சிகளால் துவங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் இடங்களை விட்டுக் கொடுத்ததுபோல தங்களுக்கும் கூடுதல் தொகுதி... மேலும் பார்க்க

மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் நில... மேலும் பார்க்க

'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின்

முறிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்றி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் கூட்டணியை கட்டிக் காக்கும் விதம் மெச்சத்தகுந்தது என அரசியல் விமர்சகர்களே பாராட்டுகின்றன... மேலும் பார்க்க

ஈரான் உச்ச தலைவர் கமேனி மறைவு: 5 நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்த இந்தியா!

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல... மேலும் பார்க்க

கர்னாடிக் சிங்கர், ஹாக்கி ப்ளேயர், 'உம்மன் சாண்டி'யின் சிஷ்யன்! - யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

காங்கிரஸ் தலைமையின் சாய்ஸ் கிறிஸ்டோபர் திலக்காங்கிரஸ் கட்சியிலிருந்து அழைப்பு... நாளைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யணும் உடனடியா நீங்க சென்னைக்கு கிளம்பி வரணும்,சுற்றியிருந்த நண்பர்களே ஐதராபாத்திலிருந்... மேலும் பார்க்க

மகள் நிச்சயதார்த்தம்;திடீர் நோன்பு; சோடங்கர்! - கூட்டணியை முடிப்பதற்குள் செல்வப்பெருந்தகை பட்ட பாடு!

புகைச்சலிலேயே பொழுதை ஓட்டிக் கொண்டிருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு வழியாக சுமுகமான தீர்வை எட்டியிருக்கிறது. ஆனால், இந்த கூட்டணி இறுதியாவதற்குள் அதிகம் அல்லோலகலப்பட்டது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ... மேலும் பார்க்க