செய்திகள் :

``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?" - நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

post image

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது.

தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது.

`தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது' என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அயோத்தி இல்லையே.

பிரதமர் மோடி - அயோத்தி ராமர் கோயில்

அதனால் அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை. நாம் எல்லோரும் ராமரின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயக ஆட்சி ராமரின் ஆட்சியைபோல் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" - செல்லூர் ராஜு சாடல்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு; மதக் கலவர முயற்சி" - முத்தரசன் காட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு, பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவை... மேலும் பார்க்க

கூட்டணி `டீல்’ - ராகுல் காந்தியை சந்தித்த சபரீசன்! திடீர் விசிட்டின் பின்னணி என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்ட... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆர் சாதனையை சமன் செய்த ஒரே முதல்வர் - மக்கள் மன்றத்தில் ஜெ.ஜெயலலிதா!

ஜெயலலிதாவை ஏன் பிடித்தது தமிழ்நாட்டு மக்களுக்கு?‘யாருக்குங்க பிடிச்சது, அவங்க நீதிமன்றத்தால் ஏ 1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்’ என்று சொல்லாம் சிலர்.அவர் எடுத்த நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு ஆளாகி இர... மேலும் பார்க்க

முறையான பராமரிப்பின்றி இருக்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம்... அவதியுறும் பொதுமக்கள்!

கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லையென்று மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்கும் போது," கும்பகோணம் பேருந்து நிலையம் மிக ... மேலும் பார்க்க