செய்திகள் :

``என்னை மன்னிசுடுங்க'' - சர்ச்சையை உருவாக்கிய `காந்தாரா' நடிப்பு; மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

post image

கோவாவில் கடந்த 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.

இந்தத் திரைப்பட விழாவில் சில அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி, ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 'காந்தாரா -சாப்டர் 1'படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ரிஷப் ஷெட்டியிடம் மேடையிலிருந்து நடித்து காண்பித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது.

ரிஷப் ஷெட்டி- ரன்வீர் சிங்
ரிஷப் ஷெட்டி- ரன்வீர் சிங்

மேடையில் பேசிய ரன்வீர் சிங், “ 'காந்தாரா- சாப்டர் 1' படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு...” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை கேலியாக செய்து காண்பித்திருந்தார்.

அது பெண் ஆவி இல்லை, பெண் கடவுள் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது என்றும் அக்கடவுளை வணங்கும் துளு மொழி பேசும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும் இதற்கு துளுநாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த அவர் "நடிகர் ரன்வீர் சிங்கின் இந்த செயல் எங்களின் பெண் தெய்வத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது செயலால் எங்கள் மனது புண்பட்டுள்ளது.

இதற்கு நடிகர் ரன்வீர் சிங், கத்ரி மஞ்சுநாதா கோவிலுக்கு வந்து சாமி சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல் ரன்வீர் சிங்கின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்

இந்நிலையில் ரன்வீர் சிங் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

"அந்த படத்தில் ரிஷப்பின் அசாதாரணமான நடிப்பை முன்வைத்துக் காட்டுவதே என் நோக்கமாக இருந்தது.

நான் எப்போதும் நம் நாட்டின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மரபையும், நம்பிக்கையையும் ஆழமாக மதித்து வருகிறேன்.

யாருடைய உணர்ச்சிகளையும் நான் புண்படுத்தி இருந்தால், இதயம் கனிந்த மன்னிப்பைக் கேட்டுகொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

``திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' - நடிகை ஜெயா பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் அடிக்கடி பத்திரிகையாளர்களிடம் கோபப்படுபவர். பத்திரிகையாளர் பர்கா தத்தின் ''வீ தி வுமன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயா பச்சன் பேசும்போது சில தகவல்... மேலும் பார்க்க

Tere Ishq Mein Review: `எங்கயோ பார்த்திருக்கேன்!' - பாலிவுட் ஹிட் வரிசையை தக்க வைக்கிறாரா தனுஷ்?!

ஷங்கரும் (தனுஷ்), வழக்கறிஞராக இருக்கும் அவருடைய தந்தையும் தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தவர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது அடி, தடி, உதை என கெத்து டிராகனாக வலம் வருகிறார் ... மேலும் பார்க்க

Dharmendra: ``எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்'' - ரஜினி, கமல், மம்மூட்டி.. லெஜண்ட்ஸ் இரங்கல்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிராந்திய தலைவர்கள் முதல் திரையுலகின் பல தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்கள் வரை அவருக்கு இரங்... மேலும் பார்க்க