Coffee bean: காபி கொட்டைகளை தின்று அழிக்கும் துளைப்பான் வண்டுகள்; 1990-க்கு பிறக...
``ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தூங்குகிறேன் அதனால்.!'' - வேலைப்பளு குறித்து ராஷ்மிகா மந்தனா
2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது.
சமீபத்தில் இவரது நடிப்பில் 'The Girlfriend' படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்திற்கு ராஷ்மிகா பேட்டி அளித்திருக்கிறார்.
"இந்த வருடம் எனக்கு சிறப்பான வருடமாக இருக்கிறது. என்னுடைய ஐந்து படங்கள் இந்த வருடம் வெளியாகி இருக்கின்றன.
சில படங்கள் திட்டமிட்டு நடந்தன. சில படங்கள் யதார்த்தமாக அமைந்தன. அந்த அனைத்து படங்களும் எனக்கு முக்கியமான படங்கள் தான்.
என் கரியரின் தொடக்கத்தில் இந்த மாதிரியான படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று என்னை நான் சுருக்கிக்கொள்ளவில்லை.
அதன் பிரதிபலிப்பு தான் தற்போது ஒரு வருடத்தில் எனக்கு ஐந்து படங்கள் வெளியாகி இருக்கின்றன.
பெரிய படங்களில் நடிப்பதை மட்டும் நான் என்னுடைய வெற்றியாக உணரவில்லை. 'The Girlfriend' மாதிரியான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பதை நான் என்னுடைய வெற்றியாக நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து வேலைப்பளு குறித்து பேசிய ராஷ்மிகா, "தொடர்ந்து வேலை செய்துகொண்டு இருப்பதால் தூங்கக்கூட நேரம் கிடைப்பதில்லை.
ஒரு நாளைக்கு 4, 5 மணி நேரம் தான் தூங்குகிறேன். இதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது.
இதெல்லாம் வேலைப்பளுவால் தான் நடக்கிறது. இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.



















