செய்திகள் :

"ஒரே நாளில் ஆந்திராவில் ரூ.5.35 லட்சம் கோடி மதிப்பிலான MoU; தவறவிட்ட தமிழ்நாடு?" - TRB ராஜா

post image

ஒரே நாளில், ஆந்திரப் பிரதேசத்தின் ரூ.5.35 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு தொழிற்துறையின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"ஒரே நாளில் ₹5.35 லட்சம் கோடி முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஆந்திரப் பிரதேசம் ஈர்த்துள்ளது!

இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாடு போட்டியிட்டு வென்றிருக்க வேண்டிய வாய்ப்புகள்!

நேற்று, ஆந்திரப் பிரதேசம் அறிவித்த முதலீட்டு உறுதிமொழிகள்:

ரிலையன்ஸ் – ₹2.73 லட்சம் கோடி

கிரீன்கோ – ₹45,000 கோடி

கிளீன்மேக்ஸ் – ₹41,000 கோடி

TRB ராஜா பதிவு
TRB ராஜா பதிவு

மேகா – ₹36,000 கோடி

கியா – ₹18,878 கோடி

ராஷ்மி – ₹18,500 கோடி

ஜே.எஸ்.டபிள்யூ – ₹15,000 கோடி

கெயில் – ₹13,500 கோடி

மற்றும் பல நிறுவனங்கள்.

த.வெ.க அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், முந்தைய திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களைத் தாண்டிப் புதிய முதலீடுகளுக்கான திட்டங்கள் எங்கே?

வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், எந்தக் கூச்சமும் இல்லாமல் அந்தப் பழைய திட்டங்களையும் தங்களது சாதனையாக இந்த அரசு சொந்தம் கொண்டாடுகிறது.

த.வெ.க அரசு தனது எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துக்கொள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் தடுப்பு வேலிகள் அமைப்பதில் மும்முரமாக இருக்கும் வேளையில், ஆந்திரப் பிரதேசமோ முதலீட்டாளர்களை ஈர்க்கும் சூழலை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது!

முந்தைய அரசின் வேகத்தை அப்படியே தொடர்வது என்பது ஒரு தொழில் கொள்கை ஆகாது! முதல்வர் அவர்களே, தமிழ்நாட்டின் கண்முன்னே நம் மாநிலத்திற்கு வரவேண்டிய எதிர்காலத் தொழிற்சாலைகளுக்கான பேச்சுவார்த்தைகளை இன்று அண்டை மாநிலங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றன.

முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்! தமிழ்நாட்டின் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்!

எம்.எல்.ஏ-க்களுடன் பேரம் பேசுவதை நிறுத்துங்கள்!

முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தொடங்குங்கள்!"

'ஜோசப் விஜய் எனும் நான்..!' - சொன்னதும் செய்ததும்... 6 மாத ஆட்சியின் குறும்படம்!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு 6 மாத ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது. மே 10 ஆம் தேதி பதவியேற்கும் போதே 'எல்லாவற்றையும் சரி செய்ய கொஞ்சம் நேரம் வேண்டும்!' எனக் கேட்டிருந்தார். பொதுச் சமூகமும் அதை ஆ... மேலும் பார்க்க

"மேக்கேதாட்டு அணை கட்ட சட்ட ரீதியாக உதவுங்கள்" - மோடியிடம் உதவி கேட்ட DK சிவகுமார்

மேக்கேதாட்டு அணை கட்டுவதை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார்.தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்புகளை அவர் கண்டுகொள்வதாக இல்லை. மேக்கேதாட்டு அணை தமிழ்நாட்டிற்குத் தான் ... மேலும் பார்க்க

பொன்னமராவதி: குடியிருப்பு பகுதியில் இடையூறாக இரும்பு குடோன்; மக்கள் சிரமம் - அதிகாரிகள் சொல்வதென்ன?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அண்ணாநகரின் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் பழைய இரும்புக் கடை குடோனில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, அப்பகுதி மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளத... மேலும் பார்க்க

``தமிழகத்தில் பணவீக்கம் உயர்வு; உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்"- அன்புமணி

இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் பணவீக்கம் உயர்ந்துள்ளது எனவும் உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே பிடியாணை: நீதித்துறையை அதிரவைத்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் காலமானார்

இந்திய நீதித்துறை வரலாற்றில் பதவியில் இருந்தபோதே உச்ச நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரும்,அதிரடியான கருத்துகளுக்கு பெயர் பெற்றவருமான சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71... மேலும் பார்க்க