செய்திகள் :

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே பிடியாணை: நீதித்துறையை அதிரவைத்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் காலமானார்

post image

இந்திய நீதித்துறை வரலாற்றில் பதவியில் இருந்தபோதே உச்ச நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரும்,அதிரடியான கருத்துகளுக்கு பெயர் பெற்றவருமான சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71), சென்னையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13, 2026) காலமானார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கர்ணன், ஜூன் 12, 1955-ல் பிறந்தவர். 1984-ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்ட அவர், சென்னை உயர் நீதிமன்றம், நகர சிவில் நீதிமன்றங்கள் மற்றும் குடும்ப நல நீதிமன்றங்களில் சிவில், கிரிமினல், அரசியலமைப்பு மற்றும் பணி தொடர்பான வழக்குகளில் வாதாடி வந்தார்.

அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி, நீதிபதிகள் எஸ்.ஜே. முகோபாத்யாயா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய கொலிஜியம் செய்த பரிந்துரையை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் மூத்த நீதிபதிகள் பி.என். அகர்வால், அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, 2009-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் பதவியேற்றார்.

"நான் தோற்றுப்போவேன் என்று தெரிந்தேதான் போட்டியிடுகிறேன்" - சி.எஸ்.கர்ணன்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் சக நீதிபதிகள் தன்னைத் தவறாக நடத்துவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து, மார்ச் 10, 2016 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு சென்ற பின்னரும் அவரது சர்ச்சைக்குரிய அதிரடி செயல்பாடுகள் தொடர்ந்தன. 2017-ல், சக நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக, அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கர்ணன் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. மேலும், நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளைச் செய்ய அவருக்குத் தடையும் விதித்தது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நடவடிக்கை, இந்திய நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், அவரை தேசிய அளவில் கவனம்பெறச் செய்தது.


ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தனது துணிச்சலான ஆனால் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால், இந்திய நீதித்துறையில் என்றும் நினைவுகூரப்படும் ஒரு நபராக நீதிபதி கர்ணன் விளங்குகிறார்.

``தமிழகத்தில் பணவீக்கம் உயர்வு; உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்"- அன்புமணி

இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் பணவீக்கம் உயர்ந்துள்ளது எனவும் உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்... மேலும் பார்க்க

"Teleprompter பயன்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பிடித்தவரே நடுவர்"- மோடிக்கு ராகுல் சவால்!

இந்திய பிரதமர் மோடி தன்னுடைய பேச்சுகளின் போது, டெலி பிராம்ப்டர் பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.தீபாவளியையொட்டி நேற்று (நவம்பர் 12) டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் செய்தியாள... மேலும் பார்க்க

ஆரணி: தவெக மா.செ மீது பாலியல் புகார்; கட்சி அலுவலகத்தை இழுத்து மூடிய பெண் நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க-வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் எம்.சத்யா என்கிற சத்தியராஜ். செய்யாறு தொகுதியைச் சேர்ந்த சத்யா, ஆரணி தொகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே நி... மேலும் பார்க்க

சிவகங்கை: துபாயில் தகவல் தொடர்பு துண்டிப்பு; கொல்கத்தாவில் வழிப்பறி- மீண்டது எப்படி? 18 நாள் திகில்!

வெளிநாட்டில் உழைத்துவிட்டுத் தாயகம் திரும்பும் ஆசையில் விமானம் ஏறக் காத்திருந்த கணவர் திடீரென மாயமானதால், 18 நாள்களாகக் கண்ணீரோடு தவித்த மனைவிக்கு, மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் கணவர் பத்திரமா... மேலும் பார்க்க

அயலக உதவித்தொகை திட்டம்: விமர்சித்த திமுக; விளக்கம் அளித்த சமூக நீதித்துறை!

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக... மேலும் பார்க்க

"கடந்த ஆட்சியைக் காட்டிலும் குறைந்த விலைக்கே சைக்கிள் கொள்முதல்" - அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்... மேலும் பார்க்க