செய்திகள் :

RAC இல்லை, Waiting List இல்லை! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் புதிய நடைமுறை!

post image

இந்திய ரயில்வே துறை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

என்னென்ன மாற்றங்கள்?

> இனி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது.

> வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் வழக்கமான பதிவு மூலம் மட்டுமே புக் செய்ய முடியும்.

> வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் டிக்கெட் புக் செய்யப்படும்போது, உறுதி செய்யப்பட்ட பெர்த் மட்டுமே கிடைக்கும்.

வந்தே பாரத்
வந்தே பாரத்

இனி இந்த வகை ரயிலில் ஆர்.ஏ.சி நடைமுறையோ, வெயிட்டிங் லிஸ்ட்டோ கிடையாது.

இதனால், இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் புக் செய்வதைத் தள்ளிப்போடாமல், முன்பே டிக்கெட் புக் செய்துவிடுவது நல்லது.

> பயணத் தேதி நெருங்க நெருங்க, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் கட்டணம் உயரும் நடைமுறை இனி கிடையாது.

தமிழ்நாட்டில் ஏதேனும் மாறுதல்?

தமிழ்நாட்டில் இதுவரை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தியாவிலேயே 3 வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ்கள் தான் உள்ளன.

அவை...

> ஹவுரா - காமாக்யா (குவஹாத்தி)

> புது டெல்லி - வாரணாசி கன்டோன்மென்ட் (காசி)

> மும்பை சி.எஸ்.எம்.டி (CSMT) - எஸ்.எம்.வி.டி பெங்களூரு (SMVT Bengaluru)

இதனால், தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் சிட்டிங் வகையில் தான் உள்ளது.

சரி... இந்த நடைமுறையால் ஒரு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் எத்தனை டிக்கெட் புக் ஆவதற்கான வாய்ப்புகளைப் பார்க்கலாம்...

மூன்று வகை ஏ.சி பெட்டிகளில் மொத்தமாக 823 பெர்த்துகள் உள்ளன. இதனால், இனி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் டிக்கெட் பதிவு செய்யும்போது, 823 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.

'Never Ending' சொகுசு கப்பல் பயணம் பாதியில் முடிவு; 200 பேர் கம்போடியாவில் இறக்கிவிடப்பட்ட பின்னணி!

இந்தியா வரவிருந்த சொகுசுக் கப்பல் பயணம் பாதியில் நிறுத்தம்! கம்போடியாவில் தவிக்கும் 200 பேர்வாழ்நாள் முழுவதும் கப்பலில் வசிக்கலாம் என்ற கனவு; ஈரான் போரால் உயர்ந்த எரிபொருள் செலவு, நிதி நெருக்கடி காரணம... மேலும் பார்க்க

NHAI: Toll Gate-ன் 20 கி.மீ-க்குள் வீடு இருக்கிறதா? ரூ.1,500 அல்லது ரூ.3,000-க்கு Local Pass!

நெடுஞ்சாலைப் பயணங்களின் போதும், நெடுந்தூரப் பயணங்களின் போதும் தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்குச் சுங்கச்சாவடிக் கட்டணம் குறித்த கவலை இருக்கும்.ஆனால், சுங்கச்சாவடி அருகிலேயே வீடு அல்லது இருப்பிடம் இர... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் முதன்முறையாக 'விஸ்டாடோம்' ரயில் பெட்டி - இயற்கையை கண்டு ரசிக்க ரயில்வே புதிய முயற்சி!

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 2017 -ம் ஆண்டு முதல் கண்ணாடிக் கூரை கொண்ட ' விஸ்டாடோம்' பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலைய... மேலும் பார்க்க