செய்திகள் :

வீட்டின் மீது தாக்குதல்: `செத்த பிறகுதான் வருவீர்களா?'- போலீஸிடம் கடுகடுத்த மகாராஷ்டிரா அமைச்சர்!

post image

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் சஞ்சய் ஷிர்சாத்திற்கு சாம்பாஜி நகரில் வீடு இருக்கிறது. சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அவரது இல்லத்தின் மீது நேற்று நள்ளிரவில் மூன்று இளைஞர்கள் கற்களை வீசியும், கண்ணாடி பாட்டில்களை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர்கள் குடிபோதையில் இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் போது ஏற்பட்ட கைகலப்பின் போது இரண்டு போலீஸாருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து மாநில போலீஸ் நிர்வாகத்தை அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் கடுமையாக விமர்த்துள்ளார். அதோடு சிவசேனாவை சேர்ந்த அமைச்சரான சஞ்சய், போலீஸார் மீது கடும் கோபம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,'' நகர போலீஸ் கமிஷனர் தனது பொறுப்புகளை விட தனது அடுத்த பதவியின் மீதுதான் கவனம் செலுத்துகிறார்.

தாக்குதல் நடத்திய இளைஞர்கள்

போலீஸ் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் குற்றங்களை கட்டுப்படுத்துவதை விட பணம் சம்பாதிப்பதிலும், லாபகரமான பதவிகளை பெறுவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

சட்டவிரோத சூதாட்டக் கூடங்கள் போலீஸாரின் ஆசியுடன் இயங்குகின்றன. இது தொடர்பான முழுப் பட்டியலையும் முதலமைச்சரிடம் ஒப்படைப்பேன். நாங்கள் செத்த பிறகுதான் போலீஸ் வருமா?. எனது வீட்டில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. நகரில் தினமும் கொலைகள் நடக்கின்றன. போலீஸ் கமிஷனர் மிரட்டி பணம் பறிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார். அதே நேரத்தில் போதைப்பொருள் வெளிப்படையாக விற்கப்படுகிறது.

எனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டரை மணி நேரம் கழித்து துணை போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு வந்தார். அதுவும் டிஜிபி தலையிட்ட பின்னரே இது நடந்தது" என, அவர் குற்றம் சாட்டினார். தாக்குதல் சம்பவம் நடந்தவுடன் நகர போலீஸ் கமிஷனரை போனில் தொடர்பு கொள்ள அமைச்சர் முயன்றார். ஆனால் போன் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று இளைஞர்கள் முதலில் தங்கள் வாகனத்திலிருந்து கீழே விழுந்து, அந்த இடத்தை விட்டு வெளியேறி சென்றர். பின்னர் பங்களாவின் பிரதான வாயிலுக்கு சென்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினர். இதனால்​​ அவர்கள் மதுபாட்டில்களைக் காட்டி வீட்டை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது.

மும்பை ரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை? ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் கையை இழந்த சோகம்

மும்பையில் எப்போதும் புறநகர் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் ரயிலில் ஏறி இறங்குவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். பெண்களுக்கு தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள... மேலும் பார்க்க

`பருப்புசாதம் இல்லாமல் ஒருநாள் கூட இருக்கமுடியாது' - உணவுபழக்கம் குறித்து சோனியா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது உணவு பழக்கம் குறித்த தகவல்களை அவரது மகள் பிரியங்கா காந்தியோடு சேர்ந்து பகிர்ந்து கொண்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தாலியிலிரு... மேலும் பார்க்க

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா! மேலும் பார்க்க

Swiggy: ஒரு மணிநேரத்துக்கு 97,545 ஆர்டர்கள் - இந்தியர்கள் தீபாவளிக்கு அதிகம் ஆர்டர் செய்தது என்ன?

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களை ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. இந்த... மேலும் பார்க்க

`மாபியா அச்சுறுத்தல்; மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லாதீர்' பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் வேண்டுகோள்

மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது சமீபத்தில் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத் துப்பாக்கிச்சூடுச் சம்பவம் தொடர்பான விசாரண... மேலும் பார்க்க

4 லட்சம் பேருக்கு அழைப்பு, பாலிவுட் பிரபலங்கள் வருகை; மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தும் பீகார் MLA

பீகாரில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆனந்த் சிங். இவர் தனது இளைய மகள் சிவாங்கி சிங்கிற்கு வரும் 25ம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார். அவர் திருமணத்திற்குச் செய்து வரும் ஏற்பாடுகள் அனைவருக்கும... மேலும் பார்க்க