செய்திகள் :

கந்தசஷ்டி விழா; சிறப்பு பேருந்துகள், முன்பதிவில்லா ரயில் இயக்கத்தால் வெளியூர் பக்தர்கள் மகிழ்ச்சி!

post image

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்தாண்டு கந்தசஷ்டி விழா கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. சஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் கடைபிடித்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

சுவாமி சண்முகர்

இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மண்டல இயக்குநர் செல்வம், “திருச்செந்தூர், கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்களும் மதுரை, நெல்லை, கோவில்பட்டி, பாபநாசம், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, திசையன்விளை, ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து 305 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வருகையைப் பொறுத்து எண்ணிக்கை மேலும் கூடுதலாக பேருந்துகள் இயக்கிடவும் தயார் நிலையில் போக்குவரத்துக் கழகம் உள்ளது.” என்றார்.  இதே போல தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் சார்பில், வரும் 15-ம் தேதி நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்

இந்த ரயில் நெல்லையில் இருந்து 03.20 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து மறுமார்க்கமாக அன்று மாலை இரவு 07.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 08.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.    

மதுரை கோலாட்டத் திருவிழா: கையில் குச்சி... கண்களில் கருணை... அழகிய அலங்காரத்தில் மீனாட்சி! | Photos

கையில் கோலாட்டக் குச்சி அன்னை மீனாட்சிகையில் கோலாட்டக் குச்சி அன்னை மீனாட்சிகையில் கோலாட்டக் குச்சி அன்னை மீனாட்சிகையில் கோலாட்டக் குச்சி அன்னை மீனாட்சிகையில் கோலாட்டக் குச்சி அன்னை மீனாட்சிகையில் கோல... மேலும் பார்க்க

ஈரோடு: 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாணியடி திருவிழா; கோலாகலமாகக் கொண்டாடிய கிராம மக்கள் | Photo Album

ஈரோடு தாளவாடியில் சாணியடி திருவிழா நடைபெற்றதுஈரோடு தாளவாடியில் சாணியடி திருவிழா நடைபெற்றதுஈரோடு தாளவாடியில் சாணியடி திருவிழா நடைபெற்றதுஈரோடு தாளவாடியில் சாணியடி திருவிழா நடைபெற்றதுஈரோடு தாளவாடியில் சா... மேலும் பார்க்க

மயிலாடுதுறை கந்த சஷ்டி விழா தொடக்கம்; முருகன் உற்சவர் சிலைக்காக மோதிக் கொண்ட ஆதீன நிர்வாகங்கள்

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குமரக்கட்டளை (முருகன்) சன்னதி தனியாக உள்ளது. தருமபு... மேலும் பார்க்க

மதுரை: ஏழு கிராமங்கள் ஒன்றுகூடும்... அம்மன் அருள்பாலிக்கும் ஏழூர் திருவிழா! |Photo Album

அம்மன் ஏழூர் திருவிழாஅம்மன் ஏழூர் திருவிழாஅம்மன் ஏழூர் திருவிழாஅம்மன் ஏழூர் திருவிழாஅம்மன் ஏழூர் திருவிழாஅம்மன் ஏழூர் திருவிழாஅம்மன் ஏழூர் திருவிழாஅம்மன் ஏழூர் திருவிழாஅம்மன் ஏழூர் திருவிழாவிருதுநகர் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி, அகரம் ஸ்ரீதுரையப்ப சாஸ்தா: படிப்பில் மேன்மை, திருமண வரம் அருளும் திருக்கோயில்!

தென்மாவட்டங்களில் சாஸ்தா ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் சில மிகவும் விசேஷமானவை. அப்படி ஓர் ஆலயம்தான் அகரம் கிராமத்தில் உள்ள துரையப்ப சாஸ்தா திருக்கோயில். தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பழையகாயலில... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம்! Photo Album

துணை ஜனாதிபதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசனம்துணை ஜனாதிபதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசனம்துணை ஜனாதிபதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசனம்துணை ஜனாதிபதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசனம்துணை ஜனாதிபதி மீனாட்சி ச... மேலும் பார்க்க