செய்திகள் :

'மாணவர்கள் மீது பழிபோட்டு, கல்வியை முடக்காமல் உதவித்தொகையை Dummy முதல்வர் கொடுக்க வேண்டும்'- உதயநிதி

post image

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 'ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.

சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர்.

இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் - வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

வழக்கம் போல பில் வரவில்லை - Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தவெக 6 மாத ஆட்சி: `` முதலமைச்சர் தன் கடமையை உணர்ந்து செயல்படவில்லை..!" - சிபிஐ வீரபாண்டியன்

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்ன... மேலும் பார்க்க

’பெண்களுக்கு தவெக கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி என்பவர் த.வெ.க பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளி... மேலும் பார்க்க

``பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக செயலாளர் மீது புகார்; என்ன நடவடிக்கை?" - வானதி சீனிவாசன்

கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, தவெக பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், கொலை மிரட்டல் மற்றும் சாதி வன்கொடுமை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித... மேலும் பார்க்க

'Confident ah இருங்க, வெற்றி நிச்சயம்னு குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா முதல்வரே?' - எடப்பாடி காட்டம்

"தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது கள்ள மௌனத்தை கலைப்பார... மேலும் பார்க்க

அயலக உயர்கல்வித் திட்டம்: "மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?" - ஸ்டாலின் காட்டம்

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக... மேலும் பார்க்க