செய்திகள் :

பெரியார் நூலக விவகாரம்: சர்ச்சைக்குள்ளான `விண்டேஜ் பிரஸ்' பதிப்பக புத்தகங்கள் அகற்றம்!

post image

கோவை பெரியார் நூலகத்திற்கு அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ. மூலம் போலிப் புத்தகங்கள் உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து முறைகேடு செய்தது போலவே, விண்டேஜ் பிரஸ் லிமிடெட் என்ற பதிப்பகமும் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. ஆங்கில நூல்கள் பிரிவில்  அப்பதிப்பகத்தின் 257 புத்தகங்கள் இடம்பெற்று இருப்பதாகவும், 250 முதல் 300 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றின் விலையும் ரூ.9,990 என்று இருப்பதாகவும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நூலின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தபோது, 64 சதவீதம் கருத்துத் திருட்டும், 70.72 சதவீதம் ஏ.ஐ. பயன்பாடும் இருப்பதும், இந்த புத்தகங்களின் ஐ.எஸ்.பி.என். எண்கள், பதிப்பகத்தின் முகவரி, எழுத்தாளர்களின் புகைப்படம் உள்ளிட்டவை போலி எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

விண்டேஜ் பிரஸ் புத்தகங்கள் அகற்றம்
விண்டேஜ் பிரஸ் புத்தகங்கள் அகற்றம்

இது சர்ச்சையான நிலையில் பெரியார் நூலகத்தில் ஆங்கில நூல்கள் பிரிவில் இடம்பெற்றிருந்த விண்டேஜ் பிரஸ் பதிப்பக புத்தகங்கள் அகற்றப்பட்டன. ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளான அகல்விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது விண்டேஜ் பிரஸ் பதிப்பக புத்தகங்களும் அகற்றப்பட்டுள்ளன. பெரியார் நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் தணிக்கை செய்து, ஏ.ஐ. மூலம் உருவாக்கிய போலிப் புத்தகங்களை கண்டறிந்து அகற்ற வேண்டுமென முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

’அகற்றப்படாத போலிப் புத்தகங்கள் ; நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரசு’ – ஓயாத பெரியார் நூலக சர்ச்சை!

கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்க... மேலும் பார்க்க

பெரியார் நூலகத்தில் போலிப் புத்தகங்கள் அகற்றம் – தமிழ்ச் சமூகத்தின் வெற்றி என எழுத்தாளர்கள் கருத்து!

கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்க... மேலும் பார்க்க

'பெரியார் நூலகத்தை போலவே கலைஞர் நூலகத்திலும் ஊழல்' - முனைவர் பட்ட மாணவர்கள் அதிர்ச்சி புகார்!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் நூலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி நூல்களை போலி எழுத்தாளர்கள் பெயரில் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ததில், கோடிக்கணக... மேலும் பார்க்க

"எவரும் பசித்திருக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர்"- எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மாரடைப்பால் மரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பிரபு தர்மராஜ் (42). குமரி மாவட்ட வட்டார வழக்கில் எள்ளல் தொனியில் கருத்துகளைப் பதிவு செய்வதில் வல்லவர். அரேபியாவுக்குப் போன த... மேலும் பார்க்க