செய்திகள் :

"காணாமல்போன செஞ்சி சிறுமியைக் கண்டுபிடிக்கவில்லை; ஆனால் குழந்தைகளுக்கு 'கேக்'" - இபிஎஸ் விமர்சனம்

post image

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் இன்று ( நவ.13) துவங்கி வைத்து மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.

மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், "திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு, கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 கேக் வழங்கிய முதல்வர்
கேக் வழங்கிய முதல்வர்

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை! ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம். வெட்கமாக இல்லையா @CMOTamilNadu அவர்களே?

கேக் கொடுக்கும் அட்டையில் All is Well என்று எழுதி இருக்கிறார்களாம். உங்கள் ஆட்சியில் “Is all Well CM?” குழந்தைகளுக்கு பள்ளி, வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா? உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்!

இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்?

 கேக் வழங்கிய முதல்வர்
கேக் வழங்கிய முதல்வர்

பெண்கள் மீது, பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள்.

திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

"கடந்த ஆட்சியைக் காட்டிலும் குறைந்த விலைக்கே சைக்கிள் கொள்முதல்" - அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்... மேலும் பார்க்க

தவெக 6 மாத ஆட்சி: `` முதலமைச்சர் தன் கடமையை உணர்ந்து செயல்படவில்லை..!" - சிபிஐ வீரபாண்டியன்

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்ன... மேலும் பார்க்க

’பெண்களுக்கு தவெக கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி என்பவர் த.வெ.க பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளி... மேலும் பார்க்க

'மாணவர்கள் மீது பழிபோட்டு, கல்வியை முடக்காமல் உதவித்தொகையை Dummy முதல்வர் கொடுக்க வேண்டும்'- உதயநிதி

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக... மேலும் பார்க்க

``பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக செயலாளர் மீது புகார்; என்ன நடவடிக்கை?" - வானதி சீனிவாசன்

கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, தவெக பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், கொலை மிரட்டல் மற்றும் சாதி வன்கொடுமை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித... மேலும் பார்க்க

'Confident ah இருங்க, வெற்றி நிச்சயம்னு குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா முதல்வரே?' - எடப்பாடி காட்டம்

"தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது கள்ள மௌனத்தை கலைப்பார... மேலும் பார்க்க