செய்திகள் :

கே.வி.குப்பம்: முதலிடத்தில் தவெக; ஜெகன்மூர்த்தி கலக்கம் - உதயசூரியனையும் ஓரங்கட்டிய `விசில்’

post image

வேலூர் மாவட்டத்திலுள்ள கீழ்வைத்தினான்குப்பம் எனும் கே.வி.குப்பம் தனித்தொகுதியில் தி.மு.க சார்பாக ராஜேஸ்வரி, அ.தி.மு.க கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்தி, நா.த.க-வில் கலையேந்திரி, த.வெ.க-வில் தென்றல் குமார் களமிறங்கியுள்ளனர். கடந்த முறைபோல, மாம்பழத்தின் துணையோடு இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டதால் `மீண்டும் வெற்றி’ எனக் கணக்குப் போட்டு தெம்போடு இருந்தார் ஜெகன்மூர்த்தி.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறி அவருக்கு அதிர்ச்சிக் கொடுத்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில், முதல் சுற்றில் இருந்தே த.வெ.க வேட்பாளர் தென்றல் குமார் முன்னிலை வகித்து வருகிறார்.

பூவை ஜெகன்மூர்த்தி

மதியம் நிலவரப்படி, 10 சுற்றுகள் முடிவிலும் த.வெ.க-வே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 10-வது சுற்று முடிவில், த.வெ.க வேட்பாளர் தென்றல் குமார் 39,666 வாக்குகள் பெற்றுள்ளார். தி.மு.க வேட்பாளர் ராஜேஸ்வரி 28,230 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நகர்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெகன்மூர்த்தி 25,488 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் தோல்வியை நோக்கி நகர்வது, அவரின் ஆதரவாளர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

த.வெ.க வேட்பாளருக்கும் ஜெகன்மூர்த்திக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 14,178. அதேசமயம், அடுத்தடுத்த சுற்றுகளிலும் வாக்கு சதவிகிதம் அ.தி.மு.க கூட்டணிக்குக் கூடாத காரணத்தினால் கலக்கத்தில் இருக்கிறார் ஜெகன்மூர்த்தி.

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' - டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொ... மேலும் பார்க்க