செய்திகள் :

சனிப்பெயர்ச்சி: சக்தி விகடன் நடத்தும் அதிவிசேஷ வாராஹி ஹோமங்கள்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

post image

மார்ச் மாதம் 6 - ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு சனிபகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தச் சனிப்பெயர்ச்சியின் மூலம் மேஷ ராசிக்கு ஏழரை சனி காலம் தொடங்குகிறது.

கும்ப ராசிக்காரர்களுக்கு பாத சனியும் மீன ராசிக்காரர்களுக்கு ஜன்ம சனியும் தொடங்க இருக்கிறது. குரு பகவான் வீட்டில் அடியெடுத்து வைக்கும் சனிபகவான் 12 ராசிக்காரர்களுக்கும் நற்பலன்களையே வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து சனி பரிகாரத்தலங்களில் இந்த நாளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

ஹோமத்தில் சங்கல்பம் செய்துகொள்ள ஆன்லைன் பதிவுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

சித்தாத்தூர் சந்தான வாராஹி
சித்தாத்தூர் சந்தான வாராஹி

இதையொட்டி சக்தி விகடன் வாசகர்களின் குடும்ப நலனை முன்னிட்டும் உலக நன்மையை வேண்டியும் சக்தி விகடனும் சித்தாத்தூர் ஸ்ரீவாராஹி மந்திர பீடமும் இணைந்து சிறப்பு ஹோம வழிபாடுகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

இந்தச் சனிப்பெயர்ச்சி நாளில் வரங்கள் தரும் வாராஹி அன்னையை வழிபடுவது விசேஷம். ஹாராஹியை வழிபட்டால் பிரச்னைகள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை. அதுவும் சனிப்பெயர்ச்சி நாளில் வாராஹியை வழிபட நம் துன்பங்கள் அனைத்தும் தீரும். நன்மையும் மேன்மையும் கூடிவரும்.

அதற்காகவே சக்தி விகடன் சனிப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமத்தில் வாராஹி ஹோமத்தை முக்கிய அங்கமாகக் கொண்டு நடத்துகிறது. காரிய ஸித்தி கிடைக்க, கடன் பிரச்னைகள் விலக, செல்வ வளம் சேர, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணவரம் கிடைக்க, எதிரிகளின் தொல்லைகள் தீர என ஆறுவகை வாராஹி ஹோமங்கள் நடைபெற இருக்கின்றன.

உச்சிஷ்ட கணபதியை தாந்திரிக கணபதி என்றும் சொல்வார்கள். இவரை வழிபட்டால் தம்பதி ஒற்றுமை கூடும். தொடங்கும் செயல்கள் நன்மையாக முடியும். எனவே இவரை வழிபட சிறப்பு ஹோம வழிபாடுகளை நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பு ஹோமம் ஒன்றையும் சனிப்பெயர்ச்சி நாளில் செய்ய இருக்கிறோம்.

மேலும் விசித்ர வீர ஆஞ்சநேயருக்கு உகந்த ஹோமம் ஒன்றும் நடத்தப்பட இருக்கிறது. இதில் சங்கல்பம் செய்துகொண்டால் மனபயம் விலகுவதோடு ஆரோக்கியமும் மேம்படும் என்கிறார்கள். மேலும் சிறப்பு நவகிரக ஹோமமும் நடைபெற இருக்கிறது. சனிபகவானுக்கு ப்ரீதியாக 330 சிறப்பு ஆவர்த்திகள் சொல்லி ஹோமம் நடைபெறும்.

சித்தாத்தூர் ஸ்ரீ வாராஹி மந்திர பீடம்
சித்தாத்தூர் ஸ்ரீ வாராஹி மந்திர பீடம்

இந்த ஹோமங்களை எல்லாம் வாராஹி குருஜி ஸ்ரீவாராஹி மைந்தன் முன்னின்று நடத்த இருக்கிறார். வேத விற்பனர்களைக் கொண்டு நடத்தப்பட இருக்கும் இந்த ஹோமத்தைத் தரிசனம் செய்வதும் அதில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்வதும் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படருக்கிறது.

சனிபகவான் அடுத்த இரண்டரை ஆண்டுகாலங்கள் மீன ராசியில் சஞ்சாரம் செய்வார். அப்போது சிம்ம ராசிக்கு அஷ்டம சனியும் கன்னி ராசிக்கு கண்டக சனியும் தனுசு ராசிக்கு அர்த்திராஷ்டம சனியும் நடைபெறும். துலாம், விருச்சிகம், ரிஷபம், மிதுனம், கடகம், மகரம் ஆகிய ராசிகளுக்குச் சாதக பலன்கள் கிடைக்கும்.

எனவே 12 ராசிக்காரர்களுக்கும் சாதக பலன்கள் அதிகரிக்க இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பூஜை வைபவங்களில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பித்து வழிபட, சகலவிதமான நன்மைகளும் உண்டாகும்.

இடம் : ஸ்ரீவாராஹி மந்திர பீடம், சித்தாத்தூர், வேடந்தாங்கல்

இந்தத் தலத்தில் 64 வாராஹி ரூபங்கள் பிரதிஷ்ட செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தரிசித்தாலே நமக்கு நற்பலன்கள் மிகுதியாகும். மேலும் 27 நட்சத்திர வாராஹிகளும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தலத்தில் மாண்டுக மகரிஷியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இத்தலத்தில் சிறப்பு ஹம் வழிபாடுகள் நடப்பதும் அதில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்துகொள்வதும் மிகுந்த பலன்களைத் தரும்.

ஹோமத்தில் சங்கல்பம் செய்துகொள்ள ஆன்லைன் பதிவுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

வாசகர்கள் கவனத்துக்கு!

இந்த ஹோம வைபவத்துக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விசேஷ ஹோமங்கள்-வழிபாட்டு சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், முறைப்படி ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + விபூதி + குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

கல்யாண வாராஹி

வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங் கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்; வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் சங்கல்பம் செய்துகொள்ள ஆன்லைன் பதிவுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

MahaSivarathri | சிவலிங்கத் தத்துவம் -கணபதி முதல் பெருமாள்வரை சிவபூஜை செய்த ரகசியம்|மகாசிவராத்திரி

திருமுருக கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் ஐயா வாதவூரன். பேச்சுக்கலையில் வாரியார் சுவாமிகளின் பரிபூரண ஆசியும் பெற்று உலகெங்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றிவருபவர். சிவராத்திரி மகிமைகளையும் சிவராத்தியில... மேலும் பார்க்க

சக்தி விகடன்-ஸ்ரீவாராஹி மந்திரபீடம் இணைந்து நடத்தும் சனிப்பெயர்ச்சி ஹோமம்: நீங்களும் சங்கல்பிக்கலாம்

அன்னை வாராஹி ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பவள். இந்த அகிலத்தை ஆளும் அன்னை ராஜராஜேஸ்வரியில் அருகில், 'தண்டினி' என்கிற திருநாமத்தோடு அருள்பவள். லலிதாம்பிகையின் படைத்தளபதியாகத் திகழ்பவள். வராக (பன்றி)... மேலும் பார்க்க