செய்திகள் :

“சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் SIR பற்றி பேசலாம்; வாருங்கள்!” ராகுல், அகிலேஷுக்கு அமித் ஷா சவால்

post image

சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடந்த குளறுபடிகளையும் சுட்டிக்காட்டியும், தேர்தல் மற்றும் எஸ்.ஐ.ஆரில் மத்திய அரசுக்குச் சாதகமாக முடிவுகளை எடுத்துள்ளார் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், லக்னோவில் நடந்த உத்தரப் பிரதேச பாஜக மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்குச் சவால் விடுத்துள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

நாங்களே ஆட்சியைப் பிடித்துள்ளோம்

நேற்றுக் கூட்டத்தில் அமித் ஷா, “ஹரியானாவில் அதிக இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. மகாராஷ்டிராவிலும் அதிகத் தொகுதிகளை வென்று என்.டி.ஏ. கூட்டணிதான் ஆட்சியைப் பிடித்துள்ளது.

பீகாரில் முதல்முறையாகப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். டெல்லியில் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

புதுச்சேரியிலும் மீண்டும் ஒருமுறை பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அசாமில் 100 இடங்களை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறோம்.

மேற்கு வங்கத்திலோ மம்தாவை முற்றிலும் துடைத்தெறிந்துவிட்டோம்.

போட்டியில் தோற்றுவிட்டால்...

இயல்பாகவே, ஒரு போட்டியிலோ அல்லது விளையாட்டிலோ ஒரு அணி தோற்றுவிட்டால், அவர்கள் மேலும் தீவிரமாகப் பயிற்சி செய்ய வேண்டும். அதுதானே இயல்பு? ஆனால் ராகுல் முற்றிலும் வேறு ரகம்.

அவருடன் இந்தியா கூட்டணியில் இருக்கும் அகிலேஷ் மற்றும் பிற தலைவர்களின் கதையும் இதுதான்.தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, நடுவர் ஏமாற்றிவிட்டார் என்றும், வாக்குகள் திருடப்பட்டுவிட்டன என்றும் குற்றஞ்சாட்டத் தொடங்கிவிட்டார்கள்.

ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்
ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்

நேரடி சவால்

ராகுலுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் நான் நேரடியாகச் சவால் விடுக்கிறேன். பாரதிய ஜனதா கட்சி இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முற்றிலும் தயாராக உள்ளது. எங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவோம். வாருங்கள்.

ஆனால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதில் துளியும் விருப்பமில்லை. நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் தடுத்து, வெறும் அமளியை மட்டுமே செய்வார்கள்” என்று பேசியுள்ளார்.

"தற்கொலை செய்யும் விவசாயிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூடாது" - சிவசேனா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அடிக்கடி சர்ச்சையாக எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ... மேலும் பார்க்க

ஏக்நாத் ஷிண்டேயுடன் பிணக்கு: தாக்கரே சகோதரர்களுடன் நெருக்கம் காட்டும் தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்தது. இதற்கு தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. கட்சி இரண்டாக உடைந... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் பேட்டியின்போது மின்தடை! - நிர்மல் விளக்கம்

நேற்று (அக்டோபர் 30), மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் மேற்கொண்டார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.தரிசனத்திற்குப் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் இரண்டு முறை அடுத்தடுத்த... மேலும் பார்க்க

சென்னை: மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு - லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் அரசே மணல் குவாரிகளை நடத்தி வந்தது. மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மணல் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தியது. இதுதொடர்பா... மேலும் பார்க்க

‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், “தமிழ்நாட்டு அரசியலில் நாளுக்கு நாள் தி.மு.க-வின் நிலை மிக மோசமான மாறி வருகிறது என்பதை தனது புலம்பல் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத... மேலும் பார்க்க

'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன?

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்... மேலும் பார்க்க