'டிட்வா' புயல் : புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்!
``சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் BJP, RSS வழக்கறிஞர்களுக்கு கொலீஜியம் பரிந்துரை" - திருமா
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்களை கொலீஜியம் பரிந்துரைப்பதாகவும், இதில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் எம்.பி தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் திருமாவளவன், ``சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது.
இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
இது மிகப்பெரிய அநீதியாகும். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.
அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
தற்போது சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனையில் உள்ளவர்களில் ஏழு பேர் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 28, 2025
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~~~~~
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பாஜக, ஆர் எஸ் எஸ் ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக்… pic.twitter.com/hD5VYH9Hqi
சமூகநீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும். தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதிதிராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
சமூகநீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலீஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.



















