செய்திகள் :

தலையில் ஒன்பது தையல் - இக்கட்டான சூழ்நிலையில் என் உயிரைக் காப்பாற்றிய காவல் தெய்வங்கள்!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மருத்துவர்கள் இவ்வுலகில் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்கள். 

என் பள்ளி வாழ்க்கையில் 9 தையல் போடும் அளவிற்கு மண்டை உடைந்த நிகழ்வையும், அதிலிருந்து எப்படி உயிர் பிழைத்துக் குணமானேன் என்பதைப் பற்றியும் இந்தத் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். அந்தத் தருணத்தில்தான் புரிந்தது மருத்துவர்கள் ஓர் உயிரைக் காப்பாற்ற எந்த அளவுக்குச் செல்கிறார்கள் என்று!

2014ஆம் ஆண்டு, நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மதிய இடைவெளிக்கான பெல் அடித்தது. நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டேன். சாப்பிட்ட பிறகு வழக்கம் போல் எப்போதும் நண்பர்களோடு விளையாடுவது வழக்கம். அதேபோல் அன்று ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, நானும் என்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினேன். அப்போது மறைந்து கொள்வதற்காகப் பள்ளியின் பக்கச் சுவரின் மேல் அமர்ந்தேன். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வராந்தாவில் இரு பக்கமும் சுவர்கள் இருக்கும் அல்லவா, அதில்தான் அமர்ந்தேன். 


நான் சுவரில் உட்கார்ந்திருந்ததை என் நண்பன் பார்த்துவிட்டான். என்னைத் தொடுவதற்காகப் பின்புறமாக மெதுவாக வந்தான், நான் அதைக் கவனிக்கவில்லை. பக்கத்தில் வந்து சத்தமாக என் பெயரைச் சொல்லித் தொட்டான். நான் அந்த அதிர்ச்சியில் கீழே குதிக்கும் போது, சுவரில் கால் இடறி தலைக்குப்புறக் கீழே விழுந்தேன். எப்படியும் தரையிலிருந்து அந்தச் சுவர் கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறடி இருக்கும்.

கீழே கிடந்த கருங்கல் என் தலையைப் பதம் பார்த்தது. வலது பக்கக் காதுக்கு மேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அடிபட்ட அடுத்த நிமிடமே தலையிலிருந்து இரத்தம் ஆறாக ஓடியது. சுற்றியுள்ள நண்பர்கள், மாணவ, மாணவிகள் எல்லோரும் உறைந்து போய்விட்டார்கள். 

உடனே என்னுடைய நண்பன், கையைப் பிடித்து என்னைத் தூக்கிவிட்டு ஆசிரியரிடம் கூட்டிச் சென்றான். நண்பனின் தோள் மேல் கை போட்டு நெஞ்சில் சாய்ந்தபடி சென்றேன்.

​வலது கையை அடிபட்ட இடத்தில் வைத்தபடி இருந்தேன். பள்ளிச் சீருடையின் வலது பக்கம் முழுவதும் இரத்தமாக இருந்தது. அதேபோல் நண்பனின் சீருடையிலும் இரத்தக் கறை படிந்தது.

​இரத்தம் சொட்டச் சொட்ட வருவதைப் பார்த்த என்னுடைய வகுப்பாசிரியர் உடனே தலைமையாசிரியர் அறையிலுள்ள முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து, அதில் உள்ள அனைத்துப் பஞ்சையும் எடுத்து என் தலையில் வைத்துப் பிடித்துக் கொண்டார். 

அனைத்து ஆசிரியர்களும் அதிர்ச்சியாகிவிட்டார்கள். 

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே ஆட்டோவை வரவழைத்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

என்னுடைய பள்ளிக்கூடத்தின் பெயர் சா. இ. நா. மேரி தொடக்கப்பள்ளி, சாத்தூர். பள்ளியானது நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. அதனால்தான் சீக்கிரமாக மருத்துவமனை செல்ல முடிந்தது. 

அடிபட்டதும் எனக்கு இரத்தம் வருவது மட்டும்தான் தெரிந்ததே தவிர, எந்த ஒரு வலியோ எந்த ஓர் உணர்வோ தெரியவில்லை!

​இருந்தும் நான் வேண்டும் கருப்பசாமியை வேண்டியபடி ஆசிரியரோடு ஆட்டோவில் மருத்துவமனைக்குச் சென்றேன்.

​சிறுவயதிலிருந்து எனக்குக் காய்ச்சல் எதுவாக இருந்தாலும் என்னுடைய அம்மா சாத்தூரில் உள்ள ஸ்டார் மருத்துவமனைக்குத்தான் என்னைக் கூட்டி வருவார்.

அடிபட்டிருக்கும் போதும் என்னுடைய ஆசிரியர் ஸ்டார் மருத்துவமனைக்குத்தான் என்னை அழைத்துச் சென்றார். ஏனென்றால் அதுதான் பள்ளிக்கு அருகில் உள்ளது.

​மருத்துவமனைக்குள் நுழைந்ததும் செவிலியர்கள் என்னை ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்கள். 

பிறகு என்னுடைய சட்டையைக் கழற்றினார்கள். தையல் போடும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஓர் ஊசியை முதலில் போட்டார்கள். ஆனால் எனக்கு மயக்கம் வரவில்லை.

​“ஒன்னும் ஆகாது! தையல் போடும்போது சும்மா எறும்பு கடிச்ச மாதிரிதான் இருக்கும்! உன்னுடைய பெயர் என்ன?” இப்படியெல்லாம் அந்தச் செவிலியர் என்னைக் கேட்டபடி தலையின் காயத்திற்குத் தையலைப் போட ஆரம்பித்தார்.

​எல்லாம் முடிந்த பிறகு இறுதியாகத் தலையைச் சுற்றி வெள்ளைத்துணியால் பெரிய கட்டு போடப்பட்டது.

​இந்தச் செய்தியை அறிந்த என்னுடைய அம்மா, வேலை பார்த்துக் கொண்டிருந்த தீப்பெட்டி கம்பெனியிலிருந்து பதற்றத்தோடு, கூட வேலை பார்க்கும் ஒருவரோடு பைக்கில் மருத்துவமனைக்கு வந்தார்.

என்னை இந்தக்கோலத்தில் பார்த்ததும் ரொம்பவும் துடிதுடித்துப் போய்விட்டார். அவசரத்தில் கையில் பணமும் கொண்டு வரவில்லை.

​தலையில் கட்டு போட்ட செலவு மற்றும் மருந்து மாத்திரைகளுக்குச் சேர்த்து 450 ரூபாய் பில் வந்தது.

அம்மா டாக்டரிடம் போய் பேசினார். நான் பக்கத்திலேயேதான் உட்கார்ந்திருந்தேன்.

​“பரவால்லம்மா நீ நாளைக்கு வந்து காச குடும்மா!” என்ற பெருந்தன்மையோடு அந்த மருத்துவர் கூறினார். மருத்துவரின் பெயர் டாக்டர் இராமசாமி.

டாக்டரின் இந்தப்பொதுநலமான, பெருந்தன்மையான மனிதநேயச் செயல் என் வாழ்க்கையைக் காப்பாற்றியதையும் தாண்டி, இப்போதும் நான் என் வாழ்க்கையில் மனிதநேயத்தோடு இருக்க காரணமும் ஆனது.

​அம்மாவிற்கு அந்த மருத்துவர் நல்ல பழக்கம். மருத்துவமனைக்குச் செல்லும்போது என்னிடமும் நன்றாக பேசுவார்.

எனக்கு உடல்நிலை சரியில்லாத போது அம்மா என்னை இந்த ஸ்டார் மருத்துவமனைக்குக் கூட்டி வரும் போது, இராமசாமி டாக்டர் அதிகமாக ஃபீஸ் கேட்கிற மாதிரி தெரிந்தால், அம்மா 30 அல்லது 50 ரூபாய் குறைத்துதான் கொடுப்பார். அதையும் சிரித்தபடி அந்த டாக்டர் வாங்கிக் கொள்வார். அப்படி ஒரு பண்புள்ள டாக்டர்.

அம்மாவிடம் காசு இல்லாததை அறிந்த என்னுடைய ஆசிரியர், அந்த 450 ரூபாய் பணத்தை எனக்காகக் கட்டினார். அம்மா ஆசிரியரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பிறகு அடிபட்டதிலிருந்து தையலைப் பிரிப்பது வரை, அம்மா என்னைக் குளிக்க வைப்பதிலிருந்து சாப்பாடு ஊட்டி விடுவது வரை வரை என்னைக் கவனமாகக் கவனித்துக் கொண்டார்.

​என் உயிரைக் காப்பாற்றியவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் என்றால் அதையும் தாண்டி சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்ற என்னுடைய ஆசிரியர்களும் தெய்வங்கள்தான்..!

​என்னுடைய வகுப்பு ஆசிரியர், மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் டாக்டர் இராமசாமி ஆகியோர்கள் என்னைக் காப்பாற்றிய காவல் தெய்வங்களாக நான் அவர்களை பார்க்கிறேன்.

​மருத்துவப்பணி அறப்பணி; அதற்குத் தங்களை அர்ப்பணிக்கும் மருத்துவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் சார்பாகத் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்!!

நன்றி..!

செ.ஹரிஷ்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

அன்று மாநிலக் கல்லூரித் தோழன்... இன்று எங்களைக் காக்கும் மருத்துவன்! - நட்பின் நன்றிக் காணிக்கை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை பற்றிய பார்வையை மாற்றிய டாக்டர் சமியுல்லா! - மாணவனின் நெஞ்சார்ந்த நன்றிக் கட்டுரை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மரணத்தின் வாசலில் இருந்து மீண்ட அந்த நாள்! - ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை காப்பாற்றியவரின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

உயிரின் எல்லையில் நிற்கும் மனிதர்கள்: மருத்துவர் தினம் சொல்லும் அமைதியான உண்மை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

26 ஆண்டுக்கால அல்சர் துயரம்... 6 மாதங்களில் குணப்படுத்திய ஹோமியோபதி டாக்டர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பெற்றோரின் கண்டிப்பு தடையல்ல! - கல்லூரி மாணவர்கள் உணர வேண்டிய உன்னத வாழ்வியல் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க