செய்திகள் :

'ஸாரி... எங்களால தோழமை கூட்டத்துக்கு வர முடியாது!' - முதல்வரின் அழைப்பை நிராகரித்த கம்யூனிஸ்ட்டுகள்?

post image

முதல்வர் விஜய் தலைமையில் நாளை தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது தவெக. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக, ஐ.யூ.எம்.எல், மதிமுக என தங்களுக்கு ஆதரவாக இருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் தவெக சார்பில் இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என இரண்டு கட்சிகளும் கலந்துகொள்ளப் போவதில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.

வைகோ
வைகோ

கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நாளை மாலை இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தவெக சார்பில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் என முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்துக்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இறங்கியிருந்தனர். நேற்று ஐ.யூ.எம்.எல் காதர் மொய்தீன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர்.

இன்று மாலை கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் காங்கிரஸூக்கு அழைப்புக் கடிதம் வழங்கியிருந்தனர். இந்நிலையில்தான் இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்டுகள் கலந்துகொள்ளப் போவதில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக தோழர்கள் சிலரிடம் பேச்சு கொடுக்கையில், 'ஆதவ்வும் ஆனந்தும் அழைப்புக்கடிதம் கொடுத்த போதே 'எங்களால் இந்த கூட்டத்துக்கு வர இயலாது' என இருதரப்பு கம்யூனிஸ்ட்டுகளும் கூறிவிட்டோம். எங்களை பொறுத்தவரை நாங்கள் இந்த ஆட்சிக்கு ஆதரவுதான் கொடுக்கிறோம்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

ஆட்சியில் பங்கு பெறவில்லை. அவர்களின் கூட்டணியிலும் இல்லை. அப்படியிருக்க இந்த கூட்டத்தில் பங்கேற்பது சரியாக இருக்காது. இதை முறைப்படி ஆதவ்விடமும் ஆனந்திடமும் கூறிவிட்டோம். நேரில் வந்து அழைத்துவிட்டார்கள், அதனால் மரியாதைக்காக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். நாளை காலை 11 மணிக்கு தொழிலாளர் உரிமைகள் சார்ந்தும் மக்கள் நலன் சார்ந்தும் சில கோரிக்கைகளோடு மு.வீரபாண்டியனும் பெ.சண்முகமும் கோட்டைக்கே சென்று முதல்வரை சந்திக்கவிருக்கிறார்கள். அப்போது, 'நாங்கள் உங்கள் ஆட்சி நிலைக்க ஆதரவு தருகிறோம். நீங்கள் நல்லது செய்தால் பாராட்டுவோம். இப்போதைக்கு கூட்டணிக்கு வாய்ப்பில்லை' என மிகத் தெளிவாக முதல்வர் விஜய்யிடம் கூறவிருக்கின்றனர்' என்றனர்.

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: ``மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும்..." - அன்புமணி ராமதாஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 எக்டர் பரப்பளவு கொண்ட நில ஒதுக்கீட்டு ஆணை காலாவதியாக இருந்த நிலையில், அதன் காலக்கெடு முடிவடையும் கடைசி நாளிலேயே, மேலும் ஓராண்டுக்க... மேலும் பார்க்க

`அன்று எதிர்ப்பு… இன்று அனுமதி!' அணுக்கனிம சுரங்கத் திட்டத்தில் தவெகவின் இரட்டை நிலைப்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம (Atomic Minerals) சுரங்கத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இத்திட்டத்திற்கு கடுமையாக ... மேலும் பார்க்க

தேர்தல் அரசியலில் மதிமுக கடந்து வந்த பாதை - வைகோ எடுத்த முக்கிய முடிவுகளின் தொகுப்பு!

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அறிவித்து விட்டார் வைகோ. கூடவே வருங்காலங்களில் தவெக-வுடன் கூட்டணி சேர்ந்து அரசியல் செய்வோம் என்றும் சொல்லியிருக்கிறார்,இந்தத் தருணத்தில் கட்சி பயணித்த கடந்த முப்... மேலும் பார்க்க

தவெக : தமிழகத்தில் ட்ரெண்ட் ஆகும் `ஆயா ராம் காயா ராம்' அரசியல்! - மக்கள் முடிவுக்கு என்ன மரியாதை?

மனம் போன போக்கில் கட்சி மாறும் அரசியல் காட்சிகளை வட இந்தியாவில் 'ஆயா ராம் காயா ராம்' என விமர்சிப்பார்கள். அந்த ஆயா ராம் காயா ராம் அரசியலை முதல்வர் விஜய் தமிழகத்திலும் வேகமெடுக்க வைக்கிறாரோ எனும் கேள்வ... மேலும் பார்க்க

`உங்கள் தயவால்தான் அவர் முதல்வராக இருந்தார்'- எஸ்.பி.வேலுமணி ஆலோசனை கூட்டத்தில் கொதித்த ஆதரவாளர்கள்

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு ஊடகங்கள்... மேலும் பார்க்க

மதுரை: `தவெக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும்; விசிக நிலைப்பாடு இதுதான்!' - திருமாவளவன்

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள... மேலும் பார்க்க