செய்திகள் :

தவெக ஆட்சியில் பங்கு? - "பிள்ளை பிறக்கும் முன் பெயர் வைக்கிற மாதிரி..." - மாணிக்கம் தாகூர் பதில்

post image

பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை த.வெ.க பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "த.வெ.க தலைவர் விஜய் பாஜக-விற்கு எதிராக நின்று வெற்றி பெற்று இருக்கிறார். மதவாதத்தை ஆதரிப்போம் என்று சொன்னவர்களை த.வெ.க தோற்கடித்து இருக்கிறது.

விஜய், ராகுல் காந்தி
விஜய், ராகுல் காந்தி

இதெல்லாம் தேர்தல் முடிவில் வெளிவந்த உண்மை. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி நிலை என்ன என்பதை அரசியல் விவகாரக் குழு முடிவெடுத்து இருக்கிறது.

அந்த முடிவை அகில இந்திய தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார். எங்களைப் பொறுத்தவரை பாஜக தமிழகத்தில் வரக்கூடாது, ஆர்.எஸ்.எஸ் வரக்கூடாது. அதற்காகச் சண்டை போடுகிறோம்.

இந்தத் தேர்தல் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது. கூட்டணி என்பது தேர்தலுக்கானது. 2026 தேர்தல் முடிவுற்றது. த.வெ.க-விடம் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்று கேட்கிறீர்கள்.. இதெல்லாம் பிள்ளை பிறக்கும் முன் பெயர் வைப்பது மாதிரி.. அதனால் நடக்கட்டும்.

மாணிக்கம் தாகூர்

தமிழக வாக்காளர்கள் தெளிவாக முடிவு எடுத்து வருகிறார்கள். சிலர் சொல்லிவிட்டு இருந்தார்கள் தமிழக மண்ணுக்கு ஆட்சியில் பங்கு ஒத்துவராது என்று... மக்கள் அதற்குப் பதில் சொல்லிவிட்டார்கள். தமிழக மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்" என்று பேசியிருக்கிறார்.

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' - டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொ... மேலும் பார்க்க