செய்திகள் :

'தவெக-வுக்கு ஆதரவு கொடுப்பதைத் தாண்டி அரசின் செயல்பாடுகளில் பொறுப்பேற்றுக்கொள்வோம்'- கிரிஷ் சோடங்கர்

post image

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.க-விற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ராகுல் காந்தி - விஜய்
ராகுல் காந்தி - விஜய்

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்புக்கு பிறகு விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கொடுத்தனர். அவர்களுடன் பிரவீன் சக்கரவர்த்தி, கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் சென்று தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தச் சந்திப்பிற்குப் பிறகு காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர், ``த.வெ.க தலைவர் விஜய்யைச் சந்தித்து எங்களது ஆதரவை தெரிவித்தோம்.

கிரிஷ் சோடங்கர்
கிரிஷ் சோடங்கர்

எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தையும் நாங்கள் அளித்துள்ளோம். மேலும் சில கட்சிகளும் த.வெ.க-வுக்கு ஆதரவளிக்க வேண்டும். த.வெ.க-வுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். புதிதாக அமையும் த.வெ.க அரசாங்கத்தில் ஓர் அங்கமாக காங்கிரஸ் இருக்கும். நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதையும் தாண்டி, அரசின் செயல்பாடுகளில் நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்வோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்?

திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர். அதன்படி கும்பகோணம் மா... மேலும் பார்க்க

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க