செய்திகள் :

"திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்"- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

post image

திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி 'லிவ்-இன்' உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பேசுப்பொருளாகியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் 19 வயது இளைஞரும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப் தாண்டே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

Rajasthan High Court
Rajasthan High Court

அவர்களது மனுவில், கடந்த அக்டோபர் 27, 2025 அன்று தாங்கள் ஒரு 'லிவ்-இன்' ஒப்பந்தத்தை செய்துகொண்டதாகவும், அதன்படி சுயமாக விரும்பி ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த உறவுக்குப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்துவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், இது குறித்து கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மனுவை எதிர்த்து வாதிட்ட அரசு வழக்கறிஞர் விவேக் சௌத்ரி, "ஆணுக்குரிய திருமணத்தின் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதான 21 வயதை அந்த இளைஞர் இன்னும் எட்டவில்லை என்பதால், அவர் 'லிவ்-இன்' உறவில் இருக்க அனுமதிக்கக் கூடாது" என்று வாதிட்டுள்ளார்.

Judgement
Judgement

ஆனால், இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்தார். "மனுதாரர்கள் திருமண வயதை எட்டவில்லை என்பதன் ஒரே காரணத்துக்காக, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் அவர்களுக்கு இருக்கும் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது." என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் தெரிவித்திருக்கிறது.

"ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசியலமைப்புச் சட்டக் கடமையாகும்" என்று வலியுறுத்திய நீதிபதி அனுப் தாண்டே, "இந்தியச் சட்டப்படி, 'லிவ்-இன்' உறவுகள் தடை செய்யப்படவில்லை அல்லது குற்றமாக அறிவிக்கப்படவில்லை" என்றும் சுட்டிக்காட்டினார்.

மனுவில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைச் சரிபார்த்து, அச்சுறுத்தல் குறித்து மதிப்பீடு செய்யவும், தேவைப்பட்டால் இந்த ஜோடிக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும், பீல்வாரா மற்றும் ஜோத்பூர் (கிராமப்புறம்) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு நீதிபதி தாண்டே உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்த உங்களது கருத்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்!

திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும்.ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனு... மேலும் பார்க்க

53 வயதில் திருமணமாகி 4 நாள்களில் பிரிவு; 14 ஆண்டுகள் போராடி ஜீவனாம்சம் பெற்ற பெண்

கணவன்–மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டால், விவாகரத்துக்காக இருவரும் பல ஆண்டுகள் கோர்ட் படியேறுவது வழக்கமாக உள்ளது. மனைவியுடன் சில நாள்கள் மட்டுமே வாழ்ந்தாலும், விவாகரத்து ஏற்படும் போது கணவன்... மேலும் பார்க்க

``சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் BJP, RSS வழக்கறிஞர்களுக்கு கொலீஜியம் பரிந்துரை" - திருமா

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்களை கொலீஜியம் பரிந்துரைப்பதாகவும், இதில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வி.சி.க தலைவர் எம்.ப... மேலும் பார்க்க

ரயிலில் தள்ளி மாணவி கொலை: குற்றவாளியின் தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களில் ஒன்று, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு விதிக்கப்பட்... மேலும் பார்க்க

`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2017 ஆம் ஆண்டில் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக நான் உட்பட 5 பேர் மீது மதுக்கூர் போல... மேலும் பார்க்க

Surya Kant: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்ய காந்த்; மோடி, அமித் ஷா பங்கேற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்றார். உச்ச நீதிமன... மேலும் பார்க்க