செய்திகள் :

“நள்ளிரவில் டெல்லிக்கு சென்ற போன் கால்.!” - க்ரீன் சிக்னல்; செய்து முடித்த ஆதவ், ஜான்

post image

`ஆட்சியில் பங்கு' என்கிற காங்கிரஸ் கட்சியின் கனவு நினைவுக்கு வருகிறது. ராகுலின் பிடிவாதம் இம்முறை வென்று, த.வெ.க-வுடன் கூட்டணி என்கிற அதிரடியான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி த.வெ.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் முயற்சி எடுத்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, த.வெ.க-வுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியில் பங்கெடுக்கலாம் என கணக்கு போட்டார்.

ஆனால், தமிழக காங்கிரஸ் தலைமை தி.மு.க-வுடன் கூட்டணி என பிடிவாதமாக இருந்ததால், கட்டாய கல்யாணம் போலவே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. 

இந்நிலையில்,தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது, த.வெ.க தனிப்பெரும் கட்சியாக எழுந்து நின்றது. அந்த கட்சி சார்பில் 108 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.

ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை எட்ட த.வெ.க-வுக்கு 12 எம்.எல்.ஏக்கள் தேவையாக உள்ளது. 4-ம் தேதி அன்று  தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போதே, பிரவின் சக்கரவர்த்தியிடம் த.வெ.க தரப்பு தொடர்பு கொண்டது. அவரும் கூட்டணிக்கு பாசிட்டிவ் சிக்னல் கொடுத்துள்ளார். 

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
விஜய்

தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு, 4-ம் தேதி  இரவு ஆதவ் அர்ஜுனா வீட்டில் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நபர்கள் கலந்து கொண்ட  ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த நள்ளிரவிலேயே ஜான், ஆதவ் அர்ஜுனாவுக்கு சிக்னல் கொடுக்க, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலிடம் பேசினார்கள். நீங்கள்  ஆதரவு கொடுத்தால், ஆட்சியில் பங்கு தர விஜய் தயாராக இருப்பதாக அப்போது தெரிவித்துள்ளனர்.

மறுநாள் 5-ம் தேதி காலை, டெல்லி தலைமையிடம்  ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இருவரும் தொடர்ந்து பேசினார்கள். இதனால், அறிவலாயத்தில் நடந்த தி.மு.க கூட்டணி தலைவர்கள் சந்திப்புக்கு கூட்டத்திற்கு காங்கி்ரஸ் தரப்பிலிருந்து செல்ல வேண்டாம் என உத்தரவு டெல்லியிலிருந்து வந்தது. 

இந்த இரண்டு மூவ்களை  காங்கிரஸ் தலைமை முன்னெடுத்த பிறகு, அமைச்சரவை குறித்து அடுத்து விவாதித்தனர். இரண்டு பேருக்கு அமைச்சர் பதவியை தர விஜய் ஒப்புக்கொண்டார். இந்த தகவலை பிரவின் சக்கரவர்த்தி மூலம் ராகுலுக்கு சொல்லியுள்ளனர். ராகுல் காந்தி நேரடியாகவே ஜான் ஆரோக்கிய சாமி மற்றும், ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரிடமும் தொலைபேசியில் பேசினார். 

அந்த நேரத்தில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய கிரீஷ் சோடாங்கர் த.வெ.க-வுடன் கூட்டணி செல்லவது குறித்து பேசினார். காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும், அதற்கு ஓ.கே. சொல்ல கூட்டணிக்கு இறுதி முடிவு எட்டபட்டது. 

விஜய், ராகுல் காந்தி

இரண்டு அமைச்சர்கள் யார் என்பதை, காங்கிரஸ் தலைமையிடம் த.வெ.க கேட்டுள்ளது. த.வெ.க தரப்பிலிருந்து ராகுலிடமிருந்தே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும் என சொல்ல, அதற்கு ராகுலும் ஓ.கே. சொல்லிவிட்டார். ஐந்தாம் தேதி இரவே கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், அதை ராகுலே அறிவிக்க வேண்டும் என த.வெ.க தலைமை காத்திருந்தது.

உள்ளாட்சியில் கணிசமான இடங்களை தருவதாக காங்கிரஸ் கட்சிக்கு த.வெ.க வாக்குறுதி கொடுத்துள்ளது. அதோடு வாரியம், மற்றும் வழக்கறிஞர்கள் நியமனத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு அளிக்க த.வெ.க ஒப்புக்கொண்டுள்ளது. 

நள்ளிரவில் துவங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவிலேயே முடிவுக்கு வந்தது. ஆதவ் மற்றும் ஜான் ஆகிய இருவரின் கடைசிகட்ட மூவ் காங்கிரஸ் கட்சியின் ஐம்பதாண்டு கனவுக்கு பாதை அமைத்துள்ளது என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.!

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' - டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொ... மேலும் பார்க்க