செய்திகள் :

"நீண்ட நாள்களுக்கு பிறகு இன்று பெருமையோடு உறங்குவேன்" - தோல்விக்குப் பிறகு TRB ராஜா

post image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தோல்வியையடுத்து தற்போதைய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"எனது மன்னை தொடர்ந்து மின்னட்டும்

மூன்று முறை வாய்ப்பளித்த எனது மன்னார்குடி மண்ணுக்கு சேவை செய்யும் வாய்ப்பளித்து என்னை அரவணைத்த அனைவருக்கும், தற்போதும் வாக்களித்த எனது ஆருயிர் மக்களுக்கும் நன்றி.

ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் மட்டும் நமது மன்னைக்கு இது வரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்த பெருமையோடு இன்று (நீண்ட நாட்களுக்கு பிறகு) உறங்குவேன்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

மன்னையில் திமுகவுக்கு வாக்களிக்க தவறியவர்கள் மன்னையின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் ஸ்டாலின் அவர்களது உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.

அவரின் உழைப்பை காலம் போற்றும்.

என்றும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் துணை நின்று தொடர்ந்து உழைப்பேன்.

தமிழ்நாட்டில் உள்ள உடன்பிறப்புகள் அனைவரும் ஆட்சி இல்லாத போதும் தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உழைப்பார்கள்".

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' - டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொ... மேலும் பார்க்க