``யார் துரோகி, யார் அப்பாவி, யார் செய்வது நியாயம் என தமிழக மக்களுக்குத் தெரியும்...
படையப்பா: ``அப்பாவோட பேட்டியை நான் தான் இயக்குனேன், அதுவே.!'' - சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி 'படையப்பா' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
ரீ-ரிலீஸிலும் இப்படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (டிச. 15) 'படையப்பா' படத்தை தியேட்டரில் பார்த்தபிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

25 வருடங்களுக்கு பிறகு 'படையப்பா' படத்தை மீண்டும் எல்லோரும் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நானும் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்தேன். 25 வருடங்களுக்கு முன்பு அப்பா எழுதிய கதை இப்போதும் புதிய படம் பார்க்கும் மாதிரி இருக்கிறது.
டிசம்பர் 12ஆம் தேதியே தியேட்டருக்கு வந்து படம் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்பாவுடன் திருப்பதிக்கு சென்றதால் அந்த நாள் ரசிகர்களுடன் படம் பார்க்க முடியவில்லை.
பாடல்கள் எல்லாம் நான் ஒன்ஸ் மோர் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் ஊஞ்சல் காட்சிகள் போன்ற விஷயங்களை எல்லாம் ஒன்ஸ் மோர் செய்து இப்போது தான் பார்க்கிறேன்.
'Appa is an Emotion' அவ்வளவு தான். எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தைப் பாருங்கள். 'படையப்பா' ரீ-ரிலீஸிற்காக அப்பா கொடுத்த பேட்டியை நான் தான் இயக்கினேன்.

"அதுவே எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.















