செய்திகள் :

பாலியல் குற்றங்கள் குறித்து சர்ச்சை கருத்து: "மனப்பூர்வமான மன்னிப்பு"- எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோ

post image

நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ``பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசும்போது, ஒரு பெண் புதருக்குப் பின்னால் மறைந்து நின்றபோது குற்றவாளிகள் வந்துவிட்டார்கள் என்கிறார்கள். அதற்காகப் போலீஸ் எல்லா புதருக்குள்ளுமா லைட் போட்டு வைப்பார்கள்? நம்மை நாமேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" எனப் பேசியிருந்தார்.

அவரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் விவாதமான நிலையில், நடிகர் எஸ்.வி. சேகர் மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

காவல்துறை
காவல்துறை

அதில், ``நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது, சுமார் 19 நிமிடங்கள் செய்தியாளர்களிடம் பேசினேன். அதில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு நான் அளித்த பதில், சில ஊடகங்களால் தங்களுக்குச் சாதகமாகச் சிறு பகுதியாக வெட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. என் பேட்டியின் சிறு பகுதியை மட்டும் பார்க்கும்போது எனது கருத்து தவறாகத் தெரிய வாய்ப்புண்டு.

எனக்கும் தாய், மனைவி, சகோதரி, மகள் மற்றும் பேத்தி எனப் பெண் உறவுகள் உள்ளனர். 'பெண்களை நாம் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்ற அக்கறையில்தான் நான் பேசினேன்.

கிராமப்புறங்களில் இயற்கை உபாதைகளுக்காக ஒரு பெண் இருட்டில் தனியாகச் செல்லும் சூழல் இருந்தால் கூட, பாதுகாப்பு கருதி யாராவது துணையாகச் செல்ல வேண்டும் என்பதே எனது எண்ணம். இதைத்தான் நான் வலியுறுத்தினேன்.

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் வெளியூரிலிருந்து வந்தவர் என்றாலும், அவரைத் தனியாக வெளியே அனுப்ப மாட்டோம். அவருக்குத் தேவையானதை நாங்களே வாங்கிக் கொடுப்போம். அந்தப் பெண் பாதுகாப்பாகத் தனது ஊருக்குத் திரும்பும் வரை அவர் எங்கள் பொறுப்பு என்று நினைப்பவன் நான்.

எஸ்.வி.சேகர்.
எஸ்.வி.சேகர்.

அரசியல் லாபத்திற்காக யாரை வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம். ஆனால், இந்தியாவில் 1500 பேருக்கு ஒரு காவலர் என்ற நிலையே உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் என்று எனது நண்பர் பாண்டே ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. உயிருக்கு மதிப்பளிப்பவன் நான்.

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை இன்னும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், சுதந்திரம் என்பது வேறு, பாதுகாப்பு என்பது வேறு. பாதுகாப்போடு கூடிய சுதந்திரமே சிறந்தது.

பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடுமையான குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட வேண்டும் என்று அந்தப் பேட்டியிலேயே நான் சொல்லியிருக்கிறேன். அதேபோல், லாக்-அப் மரணங்களுக்குக் காரணமான காவலர்களை வெறும் சஸ்பெண்ட் செய்யாமல், டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் நிரபராதி என்று நிரூபணமானால் மட்டுமே மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

நான் தர்மத்தின்படி வாழ்பவன். என்னைச் சிறு சிறு அரசியல் சர்ச்சைகளில் இழுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அதனால் எனது யாதவ சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு ஏதேனும் மனவருத்தமோ, மன உளைச்சலோ ஏற்பட்டிருந்தால், அதற்கு எனது மனப்பூர்வமான மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அனைவருடனும் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும் என்பதே எனது ஒரே எண்ணம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் போட்டியிடுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளிட்ட விவரங்கள் இந்த மாத தொடக்கத்தில் மின்னஞ்சல்... மேலும் பார்க்க

"கிணத்துக்கடவு எங்களுக்குத்தான்" - போராட்டத்தில் குதித்த பாஜகவினர்; அதிர்ச்சியில் வேலுமணி!

சட்டசபைத் தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. கோவை... மேலும் பார்க்க

கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? - பட்டியலை தயார் செய்த திமுக!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதிகளையும் தி.மு.க தலைமை இறுதி செய்துள்ளது. விரைவில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கா... மேலும் பார்க்க