செய்திகள் :

அவிநாசி: எல்.முருகனைக் களமிறக்கி துணை முதல்வருக்கு காய் நகர்த்தும் பா‌ஜக? பின்னணி என்ன?

post image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க தரப்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியலை அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.

எல்.முருகன்
எல்.முருகன்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் பா.ஜ.க தரப்பில் மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவருமான எல்.முருகன் போட்டியிட இருப்பதாக அந்த அறிவிப்பில் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை 2011-ல் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

2021 தேர்தலில் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு ஆ. ராசாவிடம் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், அவிநாசி தனி தொகுதியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

L Murugan
L Murugan

பின்னணி குறித்து நம்மிடம் பேசிய பா‌.ஜ.க முக்கிய நிர்வாகிகள், "இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் டபுள் என்ஜின் ஆட்சிதான் நடைபெற உள்ளது. அமைச்சர்கள், துணை முதல்வர் என ஆட்சியிலும் பா‌.ஜ.க முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்க அமித்ஷா அவர்கள் அடுத்தக்கட்ட நகர்வுகளைச் செய்து வருகிறார்.

எல். முருகனுக்கு நிச்சயமாக துணை முதல்வர் பதவி கிடைக்க இருக்கிறது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் உள்ளடி வேலைகளைச் செய்யாமல் இருந்தால் போதும் எங்களுக்கு வெற்றி எளிதாக அமையும்" என்றனர்.

`` `இந்த' தேவைக்கு `இதனுடன்' ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் செல்லலாம்!" - தலைமை தேர்தல் அதிகாரி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு 2026-ஐ வெளியிட்டார். ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கு கூடுதல் செலவின பார்வையாளர்கள்! - நெருக்கடி கொடுக்க திட்டமா?

அமலுக்கு வந்த தேர்தல் நடைமுறை:தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். மற்ற அனைத... மேலும் பார்க்க

தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை... எதற்காக இந்த நீண்ட இடைவெளி?

தேர்தல் அறிவிப்பு :தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி, ஒரே கட்டம... மேலும் பார்க்க

நெல்லை: மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள்! உடனடியாக அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்!

நெல்லை: மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள்! உடனடி அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்! மேலும் பார்க்க