அமித்ஷா சந்திப்பு: ``கூட்டணி குறித்து பேசவில்லை; இதற்கு தான் டெல்லி சென்றேன்'' -...
``பொன்னென மின்னும், கண்களைப் பறிக்கும்'' - 175 ஆண்டுகளுக்குப் பின் மாயப்பூ; ஆய்வாளர்கள் சொல்வதென்ன?
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மலைக்கு வருகை தந்திருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரான ராபர்ட் வைட் என்பவர், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் ‘Campbellia aurantiaca’ என்ற ஒட்டுண்ணி தாவரம் ஒன்றை 1849ஆம் ஆண்டு கண்டறிந்து பதிவு செய்துள்ளார்.
பொன்னென மின்னி கண்களைப் பறிக்கும் அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பூத்துக் குலுங்கும் இந்த அரிய ஒட்டுண்ணி தாவரம் குறித்தும், வண்டுகளை ஈர்க்கும் தன்மை குறித்தும் தனது ஆய்வு குறிப்புகளில் எழுதி வெளியிட்டுள்ளார் ராபர்ட் வைட்.
அதன் பிறகு வேறு எங்கும் இந்த ஒட்டுண்ணி தாவரம் தென்பட்டதாக ஆய்வாளர்கள் பதிவு செய்யவில்லை.

மாயப்பூ என ஆய்வாளர்கள் தேடப்பட்டு வந்த இந்த ஒட்டுண்ணி தாவரத்தை கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர் குழுவினர்.
எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வாளர்கள், ஆலப்புழா தாவரவியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் சில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய இந்த குழுவினர், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல் மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் இந்த அரிய தாவரத்தைக் கண்டறிந்துள்ளனர்.
175 ஆண்டுகள் கழித்து தென்பட்ட இந்த மாயப்பூ, சர்வதேச அளவில் தாவரவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

















