செய்திகள் :

மகளிர் உரிமைத்தொகை: "நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம்?" - அமைச்சர் KKSSR விளக்கம்

post image

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கத்தை வெள்ளியன்று மாலை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் 38,263 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை வழங்கினர்.

மகளிர் உரிமைத்தொகை
மகளிர் உரிமைத்தொகை

இந்நிகழ்ச்சிக்குப் பின் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்‌.ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “மகளிர் எல்லாம் எதிர்பார்த்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2-வது கட்டமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகையை வழங்கி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 17 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 637 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2-வது கட்டமாக 67,551 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய 38,263 பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை
மகளிர் உரிமைத்தொகை

நமது முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி நிறைவேற்றியுள்ளார். தாய்மார்கள் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்" என்றார்.

'மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதிகள் தளர்த்தப்பட்டிருந்த போதிலும் 27,000 பேருக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது ஏன்?" என்ற கேள்விக்கு, "அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களாக இருக்கலாம். தகுதி உடையவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

முதல் கட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டவர்களுக்கு இருந்த தகுதிகள் தளர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் இரண்டாவது கட்டம் மகளிர் உரிமைத்தொகை வழங்கியிருக்கிறோம்.

வசதி படைத்தவர்கள் நீக்கப்பட்டு வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு நிறைவாக வழங்கியுள்ளோம்.

மகளிர் உரிமைத்தொகை
மகளிர் உரிமைத்தொகை

"கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கலாமா?" என்ற கேள்விக்கு, "இதுகுறித்து முதல்வர் முடிவு எடுப்பார்" என்றார்.

நிராகரிக்கப்பட்டவர்கள் குறித்த கேள்விக்கு, "ஆர்.டி.ஓ-விடம் மேல்முறையீடு செய்யலாம். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.‌ அது குறித்த விளக்கங்கள் அவர்கள் தெரிவிப்பார்கள்.

எங்களைப் பொறுத்தளவில் பொதுமக்கள் சொல்லக்கூடிய குறைகளைக் கனிவோடு கேட்கக்கூடிய இடத்தில் இருக்கிறோம். குறைகளை நிவர்த்தி செய்வதற்கு என்ன வழியோ அதனைச் செய்கிறோம்" எனக் கூறினார்.

இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன?

2026-ம்‌ ஆண்டிற்கான உலக சமத்துவமின்மை அறிக்கை வெளியாகி உள்ளது.இது 2018, 2022 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக வரும் அறிக்கை இது ஆகும்.அதில் கூறப்பட்டுள்ளவை...இந்தியாவின் முதல் 1 சதவிகித பணக... மேலும் பார்க்க

``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அனுராக் தாகூர் காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து அமைப... மேலும் பார்க்க

``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இசைத்த ஆளுநர் ரவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மைய... மேலும் பார்க்க

`` ஈரோடு வரும் விஜய்; காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள்" - தேதியை அறிவித்த செங்கோட்டையன்

தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் க... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தார் சாலைகள் - மக்கள் நிம்மதி!

திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த தார்சாலைகள் குறித்து, 11/10/2025 அன்று விகடனில், "சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்ப... மேலும் பார்க்க