செய்திகள் :

மாநில, மாவட்ட நிர்வாகிகள்மீது குற்றச்சாட்டு - அதிருப்தி அலையால் கிருஷ்ணகிரி திமுக-வில் சலசலப்பு!

post image

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நடந்த திமுக செயற்குழுக் கூட்டங்கள், குற்றச்சாட்டுகள், வாக்குவாதம், சண்டை, சச்சரவு என முடிந்துள்ளது... கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி

தேர்தல் தோல்விக்கான காரணங்களை விசாரிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 36 பேர்கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன் அந்த ஆய்வுக்குழுவை எதிர்கொள்ளவும், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துகளை கேட்க மாவட்ட செயற்குழுக் கூட்டத்தை நடத்தவும் திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.

அந்த அடிப்படையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான மதியழகன் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இக்கூட்டம் கடந்த 18 ஆம் தேதி காலை கிருஷ்ணகிரியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

மதியழகன்

மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இன்னும் பல நிர்வாகிகள் கெடுபிடிக்குப் பின்பே அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அப்போது கட்சியின் சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள் வெளியற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் கூற, அதனால் சலசலப்பு ஏற்பட்டது.

செங்குட்டுவன்

அப்போது முன்னாள் எம்.எல்.ஏவும் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநிலச் செயாளாருமான செங்குட்டுவன், ``எல்லோரையும் வெளியேற்றிவிட்டு யாரை வைத்து கூட்டம் நடத்தப் போகிறீர்கள்" என்று கேள்வி எழுப்ப, ``தலைமை உத்தரவின்படிதான் செய்கிறேன், நீங்களும் வெளியேறலாம்" என்று மதியழகன் கூற... முன்னாள் எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கும், மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பின்பு செங்குட்டுவன் அங்கிருந்து வெளியேற, ``உங்கள் கருத்துகளை ஆய்வுக்குழு வரும்போது தெரிவியுங்கள்" என்று கூறிவிட்டு, கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மதியழகன் அறிவித்தார்.

கிழக்கு மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர் தொகுதிகளில் திமுக தோல்வி அடைந்ததன் காரணம் குறித்து கூற வந்திருந்த நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தார்கள்.

MK Stalin
MK Stalin

இதுபோலவே கடந்த 17 ஆம் தேதி ஓசூரில் நடந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில், ``மாவட்டச் செயலாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பிரகாஷ்க்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் மேயர் சத்யாவை வேட்பாளராக அறிவித்த பொறுப்பு அமைச்சர் சக்கரபாணியும் பென் நிறுவனமும்தான் தோல்விக்குக் காரணம்" என்று குற்றம்சாட்டிப் பேசிய நிர்வாகிகள், ``தன் தொகுதியில் வெற்றி பெற பணத்தை வாரி வாரியிறைத்த சேகர் பாபு, முதல்வர் போட்டியிட்ட தொகுதியை கவனிக்கவில்லை" என்று குற்றம்சாட்டிப் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோலவே தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்திலும் யாரையும் பேச விடாமல் மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான மணி மட்டும் பேசிவிட்டு, ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கூட்டத்தை முடித்துவிட்டு சென்றதையும் தருமபுரி மாவட்ட திமுக-வினர் விமர்சித்து வருகின்றனர்.

PM SHRI: ``முதலமைச்சர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்" - தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை!

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கையை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி நிதியை நிறுத்தி வைத்தது. தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

உ.பி: 9 ஆண்டுகளில் 17,043 என்கவுன்ட்டர்கள்: யோகி அரசின் `Zero-Tolerance' நடவடிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது முதல், குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக 'Zero-Tolerance' (பூஜ்ஜிய சகிப்புத்தன்மை) கொள்கையை தீவிரமாக நடைமுறை... மேலும் பார்க்க

தவெக: ``என்னை மட்டும் போகஸ் செய்து விமர்சிக்கிறார்கள்!" - எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் விளக்க வீடியோ

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கவுண்டம்பாளையம் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளைச் சந்தித்து, தொகுதி... மேலும் பார்க்க

'மூன்றே மாதம் மில்லியன் டாலர் கணக்கில்' தன்னுடைய முதலீட்டிற்கு 'அதிபர்' பதவியை பயன்படுத்திய ட்ரம்ப்?

'மூன்று மாதங்களில் 3,700 மேலான டிரேட்கள்' - அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதலீட்டு தகவல்கள் வெளியாகி உள்ளன. 2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், ட்ரம்ப் 3,700-க்கும் அதிகமான டிரேட்களை செய்துள்ளார். இ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி மீதான வழக்கு: "அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்... மேலும் பார்க்க