செய்திகள் :

"முதல்வருக்கு தலைகுனிவு வந்தால் நாங்கள் சும்மா விட்டுவிடுவோமா?" - பிரேமலதா விஜயகாந்த்

post image

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ``பொது பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் எல்லாம் வந்திருக்கிறது. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

தமிழக சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம்

தேமுதிகவை பொறுத்தவரை மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடர வேண்டும். மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது அறிவிக்கப்படவில்லை என்பது ஏமாற்றம்.

அரசுகள் கடன் வாங்குவதை நாம் குறை சொல்ல முடியாது. ஏனெனில், நமக்கு பள்ளிகளிலிருந்தே கடன் வாங்கிதான் கூட்டல் கழித்தல் கணக்குகளை சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு குடும்பமும் கடனில் இருக்கிறது.

ஜப்பானில் எல்லாம் கடன் வாங்கி கணக்கை தீர்க்க சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். இருப்பதற்குள்ளாகவே மாணவர்களுக்கு கணக்கை தீர்க்க கற்றுக் கொடுப்பார்கள். ஆகவே உயர்கல்வி அமைச்சரை கடன் வாங்காமல் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வலியுறுத்துகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தொடர்ந்து மேகதாது அணை கட்டுவது குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "கர்நாடகாவுக்கு முதல்வர் போகக் கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள். அவர் செல்லட்டும், சென்று பேசட்டும். இல்லையென்றால் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் இங்கு வரட்டும். பேசினால்தான் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல வேண்டும். அப்படி சென்று அவமரியாதை ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். உங்களுக்கு ஒரு தலை குனிவு வந்தால் இந்தத் தமிழ்நாடு பொறுத்துக்கொள்ளுமா? நாங்கள் சும்மா விட்டுவிடுவோமா? எங்கள் முதல்வர் விஜய்யை அவமதிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று மக்கள் வெகுண்டு எழுவார்கள்" என்று பேசியிருக்கிறார்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அமெரிக்க கப்பல்கள் கடந்து செல்ல தடை? ஈரான் `புது' பிளான்!

ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரானும் விடுவதாக இல்லை... அமெரிக்காவும் விடுவதாக இல்லை. அமெரிக்காவும், இஸ்ரேலும் போரைத் தொடங்கிய உடன் ஈரான் செய்தது - ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கம். இன்னும் ஹார்முஸ் நீர்ச்சந்தி... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனா தான் சீட் வாங்கி கொடுத்தார்..!" - சட்டமன்றத்தில் ரகசியத்தை உடைத்த திமுக எம்.எல்.ஏ

``அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருக்கும்போது அவர்தான் எனக்குச் சீட் வாங்கிக் கொடுத்தார்" என்று திமுக எம்.எல்.ஏ ரிஷிவந்தியம் கார்த்திகேயன் கூறியது, அவை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.தமிழக அரசி... மேலும் பார்க்க

``கடைசிகாலம் வரை எடப்பாடியாரின் படைத்தலைவர்களில் ஒருவனாக இருப்பேன்!" - கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, தி.மு.க-வில் சேரவிருப்பதாக வெளியான செய்தி, தமிழக அரசியலில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.அ.தி.மு.க தொடர்ந்து இர... மேலும் பார்க்க

`உதயநிதி விவகாரத்தில் கைதா?' - கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியைத் தவிர்த்த திமுக முன்னாள் மேயர்!

திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், தஞ்சாவூரில் கடந்த 3ம் தேதி காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசையும், முதல்வரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் இரட... மேலும் பார்க்க

சிப் தயாரிக்க உதவும் Polysilicon-க்கு வரி விதிக்கும் அமெரிக்கா; சீனாவிற்கு நெருக்கடி?

உலக அளவில் பாலிசிலிகான் சந்தையில் சீனாவிற்கு என்று தனி இடம் உண்டு. செமி கண்டக்டர்கள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்பில் பாலிசிலிகான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு செக் வைப்பது போல, அமெரிக்கா பு... மேலும் பார்க்க

"அதை உங்க அப்பாவிடம்தான் கேட்கணும், அவரை இங்க காணோம்..!"- ஆதவ் அர்ஜுனா Vs உதயநிதி

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்மாக் தொடர்பான விவாதத்தின்போது, ``717 கடைகளை முழுமையாக மூடிவிட்டோம். எந்தெந்த கடைகளை மூடினோம் என்பதை கடை எண்களோடு தெரியப்பட... மேலும் பார்க்க